ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்‘ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அறிமுக நிகழ்வில் சந்தானம் பேசியதாவது: “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக ‘டிடிரிட்டர்ன்சை‘ முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம். ‘தில்லுக்கு துட்டு‘ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. டிடி ரிட்டர்ன்சும் மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும்.*******
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது… “தான் மட்டும் இல்லாமல் தன் குழுவினரும் வளர வேண்டும் என்று சந்தானம் அவர்கள் நினைப்பார். நானும்அக்குழுவை சேர்ந்தவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நகைச்சுவை நிறைந்த திரைப்படம் இது, டிடிரிட்டர்ன்ஸ் போன்று இன்னும் பல திரைப்படங்களில் சந்தானம் நடிக்க வேண்டும்.” பெப்சி செயலாளர் சுவாமிநாதன் பேசியதாவது… “பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் மிக அதிக பொருட்செலவில் இப்படத்தை எடுத்து உள்ளார்கள். ‘டிடி ரிட்டர்ன்ஸ்‘ திரைப்படத்தின் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து மிகவும் மகிழ்ச்சி. இத்திரைப்படம்மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்.”
இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசியதாவது… “இன்று உங்கள் முன்னால் இயக்குனராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சந்தானம் அவர்களும்ராம்பாலா அவர்களும் தான். கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தது முதல் இன்று வரை சுமார்18 ஆண்டுகளாக சந்தானம் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். இதுவரை வந்த பேய்படங்களில் பார்த்தது எதுவும் இப்படத்தில் இருக்காது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்‘ மிகவும் ஃபிரஷ்ஷாக இருக்கும். இப்படத்திற்காக அயராது உழைத்த எங்கள் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.”
நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது… “சந்தானமும் நானும் 25 வருடங்களாக நண்பர்கள். இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்ததுமகிழ்ச்சி.” நடிகை மசூம் ஷங்கர் பேசியதாவது… “இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. சந்தானம் மிகவும்திறமை வாய்ந்த நடிகர். இயக்குநர் பிரேம் ஆனந்த் திறம்பட திரைக்கதை அமைத்து அதைபடமாக்கியுள்ளார். இப்படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” குழந்தை நட்சத்திரம் மானஸ்வி பேசியதாவது… “சந்தானம் அங்கிள், இயக்குநர் பிரேம் ஆனந்த் அங்கிள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தபடத்தில் நடித்தது மிகவும் ஜாலியான அனுபவம். பிரேக் சமயங்களில் விளையாடிக் கொண்டிருப்போம். அனைவரும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளோம்.”
நடிகர் பிபின் பேசியதாவது… “இந்த படத்தின் நகைச்சுவை மிகவும் பேசப்படும். எனக்கும் முனீஷ்காந்துக்கும் இடையேயான காட்சிகள்ரசிகர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தும். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளியுங்கள்.” நடிகர் சாய் தீனா பேசியதாவது… “சந்தானம் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனென்றால் சினிமாவை தாண்டி மனிதநேயம் அதிகம்கொண்டவர் அவர். அவரும் இயக்குநர் பிரேம் ஆனந்தும் சேர்ந்து இப்படத்தில் நகைச்சுவை விருந்துபடைத்துள்ளார்கள், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” நடிகர் சேது பேசியதாவது… “நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார்கள், இது திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய படம். காணத்தவறாதீர்கள்.” நடிகர் தங்கதுரை பேசியதாவது… “சந்தானம் அவர்கள் எனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார், மிக்க நன்றி. இப்படத்தில் அவர்கோஸ்டை ரோஸ்ட் செய்துள்ளார். நீங்கள் அனைவரும் இப்படத்தை ரசித்து மகிழ்வீர்கள்.” நடிகர் மாறன் பேசியதாவது… “இப்படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம், ஒவ்வொரு சீனுக்கும் அவ்வளவு பணியாற்றவேண்டியதிருந்தது, அது குறித்து விரிவாக திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசுவோம், நன்றி.”
நடிகர் பெப்சி விஜயன் பேசியதாவது…
“இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு குழந்தையும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்‘ திரைப்படத்தை மீண்டும் மீண்டும்திரையரங்குகளை காண்பதற்காக அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களிடம் கேட்பார்கள். இதைஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.” நடிகை சுரபி பேசியதாவது… “இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல், ஏனென்றால் பேய் காமெடி படத்தில் இப்போது தான் முதல்முறையாக நடித்துள்ளேன். இப்படத்தின் குழுவினர் என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சந்தானம் அவர்களுக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கும் மிக்க நன்றி.”
இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசியதாவது… “இன்று உங்கள் முன்னால் இயக்குனராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சந்தானம் அவர்களும்ராம்பாலா அவர்களும் தான். கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தது முதல் இன்று வரை சுமார்18 ஆண்டுகளாக சந்தானம் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். இதுவரை வந்த பேய்படங்களில் பார்த்தது எதுவும் இப்படத்தில் இருக்காது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்‘ மிகவும் ஃபிரஷ்ஷாக இருக்கும். இப்படத்திற்காக அயராது உழைத்த எங்கள் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.”