பொன்னி C/O ராணி” வீட்டை விட்டு வெளியேற்றப்படும் ஸ்வேதா..! கேள்விக்குறியாகும் சந்துரு – ஸ்வேதா வாழ்க்கை

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை  இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”. பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சந்துரு, ஸ்வேதாவின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் வருவதால் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது. ஒருபுறம் ஸ்வேதா கர்ப்பமாக இல்லை என்பது பொன்னிக்கு தெரிய வர, மறுபுறம் தன் குழந்தை பாரதியின் வயிற்றில் வளர்வது சந்துருவுக்கு தெரிய வர, இதனால் பொன்னி வீட்டில் பிரளயம் வெடிக்க, வீட்டை விட்டு வெளியேற்றப்படும் ஸ்வேதா இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போகிறாள்? சந்துருவும், ஸ்வேதாவும் சேர்வார்களா? என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.