இயக்குநரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஓங்கிஅடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா‘. ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்து, தயாராகி இருக்கும் வணிக ரீதியான படைப்பு என்ற பிரிவில் கின்னஸ் சாதனைக்கு இந்த படக் குழுவிண்ணப்பித்துள்ளது. கின்னஸ் சாதனையை ஏற்று அறிவிக்கும் குழுவினரும் இது தொடர்பான சாதகமான பதிலை படக்குழுவினருக்கு வழங்கி இருக்கிறார்கள்.******