செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து மாமல்லபுரத்தில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை காட்சி ( ஓசன் வீயூ) திடலில் ஆகஸ்ட் மாதம் 12 ந்தேதிமுதல் 15 தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் 2-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை காஞ்சிபுரம்நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்கள் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.த.மோ. அன்பரசன் அவர்கள் (12.08.2023) தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலாமாகஉருவாக்கி வருகின்றார். குறிப்பாக சுற்றுலாத்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கும்வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்ததன்காரணமாக உலகின் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கியமானவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் அதிக அளவில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
தொடர்ந்து சுற்றுலாத்துறையின் மூலமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும்வகையில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, மலைவாசஸ்தலங்களில் கோடைவிழாக்கள், பொள்ளாச்சியில் பலூன் திருவிழா, சென்னை தீவுத்திடலில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தகைவினை கலைஞர்கள், கைத்தறியாளர்கள் பங்கேற்ற சென்னை விழா, இந்திய சுற்றுலா மற்றும் தொழில்பொருட்காட்சி என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் வகையில் கடந்த ஆண்டுசர்வதேச காத்தாடி விழாவினை தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து மாமல்லபுரத்தில் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை காட்சி ( ஓசன் வீயூ) திடலில் நடத்தியது. இந்த காத்தாடி விழாவில்50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள். சுற்றுலாபயணிகளை கவரும் வகையிலான தொடர் நடவடிக்கைகளால் கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில்57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆகஉயர்ந்து இந்த ஆண்டு 2023 ல் ஜூன் மாதம் வரை 6 மாத காலத்தில் மட்டும் 5,27,072 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல்21,85,84,846 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு 2023 ல் மே மாதம் வரை 5 மாத காலத்தில் 14,48,16,003 எனஉயர்ந்துள்ளது.
-2- தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தமிழ்நாடு சர்வதேச காத்தாடி விழா இந்த ஆண்டு (2023) மாமல்லபுரத்தில்இன்று (12.08.2023) முதல் 15 தேதி வரை 4 நாட்கள் நடத்தப்பட உள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா, பிரான்ஸ், வியட்நாம், சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்தசர்வதேச காத்தாடி அணிகள் 200க்கும் மேற்பட்ட காத்தாடிகளுடன் கலந்து கொள்ள உள்ளன.
இந்த ஆண்டு காத்தாடி விழாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “அலைகளின் சிறகுகள், கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்றுங்கள், தாய் பூமியைக் காப்பாற்றுங்கள்” (Wings of Wave, Save Marine Life, Save Mother Earth) என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, பல்வேறு கடல் விலங்குகள்வடிவத்திலான காத்தாடிகள் பறக்க விடப்பட்டன. இந்த விழாவினையொட்டி காத்தாடி காட்சிப் பெட்டிகள், நேரடி இசை நிகழ்ச்சிகள், உணவுக் கடைகள் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான பிரத்யேகப் பகுதிஉள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. காத்தாடி திருவிழாவிற்கு முன்னோட்டமாக கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை 3 நாட்களுக்கு காத்தாடிகளின் அணிவகுப்பு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவிற்கு கலந்துகொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசமாகும். மேலும், விவரங்களுக்கு www.tnikf.com ஆன்லைன் முகவரியில்முன்பதிவு செய்து நுழைவு சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பொது மேலாளர் திருமதி.பாரதிதேவி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.இதயவர்மன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.சக்திவேல், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்,