“எதிர்காலத்தைப் பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம்” என்ற கொள்கையுடன் மாபெரும் மரக்கன்றுகள்நடும் திட்டத்தை மத்திய தொழிலக பாதுகாப்பு படை செயல்படுத்துகிறது.
இதன் இரண்டாம் கட்டமாக 18.08.2023 (வெள்ளிக்கிழமை), மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் விமானநிலைய பாதுகாப்பு குழுவும், (சிஐஎஸ்எஃப்–ஏஎஸ்ஜி), சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனநிகர்நிலை பல்கலைக்கழகமும் (SIMATS) இணைந்து சன்ரக்ஷிகா எனப்படும் மத்திய தொழிலகபாதுகாப்புப்படையின் குடும்ப நலச்சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தன. இந்நிகழ்வில் சவீதா பல்கலைக்கழக வளாகத்தில் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய தொழிலகப் பாதுகாப்புப்படையின் மூத்த அதிகாரி திரு. கே.வி.கே.ஸ்ரீராம் (டி.ஐ.ஜி / சி.ஐ.எஸ்.ஓ), சவீதா கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் குனிதா, சவீதாவிருந்தோம்பல் மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஜெ.திரி புவன், சவீதாவிளையாட்டுப்பிரிவின் தலைவர் திரு. வி.வல்வீமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் (சி.ஐ.எஸ்.எஃப்) குடும்பத்தினர், சி.ஐ.எஸ்.எஃப் படை வீரர்கள் 287 பேர், 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களும் உற்சாகத்துடன் இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.