பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படம் ’பராக்ரமம்’

பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்என்ற நிறுவனம் சார்பில் பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படத்திற்குபராக்ரமம்என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுஇப்படம் குறித்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் பண்டி சரோஜ்குமார் கூறுகையில், ”மதுரையில் உள்ளகிராமத்தைச் சேர்ந்த துரைராஜா என்கின்ற இளைஞனின் வாழ்க்கையில் உள்ளூர் மட்டை பந்தாட்டம், காதல், நாடக வாழ்க்கை மற்றும் அரசியல் ஆகியவை எப்படிப்பட்ட பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்த படத்தின் முக்கிய கதையம்சம். இளைஞர்களை அனைத்து விதத்திலும் பொழுதுபோக்கு விதமாக மட்டும் இன்றி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து பார்க்ககூடிய படமாகவும்பராக்ரமம்இருக்கும்.*********

இந்த படத்தை நான் இயக்கி, தயாரித்து, நாயகனாக நடிப்பதோடு, இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளையும்நானே செய்யப் போகிறேன். மேலும், என்னுடன் பல திறமையான புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தின்மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்கள்.” என்றார். பண்டி சரோஜ்குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனாமிகா, கிரிட்டி, மோகன் சேனாபதி உள்ளிட்ட பலர்முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கி நடிப்பதோடு, இசை, படத்தொகுப்பு ஆகியபணிகளையும் பண்டி சரோஜ்குமாரே கவனிக்கிறார். விஎப்.எக்ஸ் பணிகளை அயேக்ரா ஸ்டுடியோஸ் மேற்கொள்ள, கலை இயக்குநராக கிரிட்டி முசிபணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பு மற்றும் மிக்ஸிங் பணியை காளி எஸ்.ஆர்.அசோக் கவனிக்க, சசாங்வெண்ணெலகண்டி பாடல்கள் எழுதுகிறார். லைன் புரொடியூசராக பிரவீன் குதூரி பணியாற்ற, மக்கள்தொடர்பாளராக ஹஸ்வத் சரவணன் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக மனராஜு பணியாற்றுகிறார். புகைப்படக் கலைஞராக நவீன் கல்யாண் பணியாற்றுகிறார்.

தற்போது படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் பண்டி சரோஜ்குமார், செப்டம்பர்மாதம் படப்பிடிப்பை தொடங்கி, அக்டோபர் மாதத்திற்குள் இரண்டு கட்டங்களாக 30 நாட்களில் முழுபடப்பிடிப்பையும் முடித்து, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிடதிட்டமிட்டுள்ளார்.