கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், காமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பார்த்தனா சந்தீப் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ரங்கோலி‘. அரசு பள்ளியில் படிக்கும் மாணவன்காம்ரேஷ். பள்ளியில் முதல் மாணவனாகவும் திகழ்கிறார். மகனை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க வேண்டும் என்ற ஆசையில் தந்தை ஆடுகளம் முருகதாஸ் விரும்புகிறார். மகனைவலுக்கட்டாயமாக தனியார் பள்ளியிலும் சேர்த்து விடுகிறார். எதற்காக தனியார் பள்ளியில் படிக்கமறுக்கிறான் என்பதுதான் கதை. அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்துநடித்திருக்கின்றார்கள். நகைச்சுவை ஆங்காங்கே இழையோடுகிறது. 15 வயதில் தானாக காதல்வந்துவிடும் என்பதை திரைக்கதை தேவையில்லாமல் சொல்கிறது. கேட்கும்படியான இசையில் படம் சலிப்பு தட்டாமல் செல்கிறது.