மாமல்லபுரம் மரகத பூங்காவில், ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மரகதப் பூங்காவில், சுற்றுலா துறையின் மூலம் ஒளிரும் பூங்காஅமைக்கும் பணியின் தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு...ராகுல்நாத்...., அவர்கள் தலைமையில் இன்று ( 1.9.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்மற்றும் தனியார் நிறுவனத்தினர் இணைந்து அரசு, தனியார் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் ஒளிரும் பூங்காஅமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்திரு.எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சுதர்சனம் அவர்கள், சுற்றுலாஇயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி, ..., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 செங்கல்பட்டு மாவட்டத்தின் மாமல்லபுரம் வரலாற்று சிறப்புமிக்கது. மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களால்உருவாக்கப்பட்ட ஒற்றை கற்கள் மற்றும் மலைப்பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளிட்ட கலைபடைப்புகள் உலக பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெளிநாட்டுசுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் வருகை தருகின்றார்கள்.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாமல்லபுரத்தின் சிறப்புகளை உலகமெங்கும் கொண்டுசெல்லும் வகையில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தி, பல்வேறு நாடுகளைச்சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒரே நேரத்தில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை அறிந்து செல்ல செய்தார்கள்.

 மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சாகச அனுபவத்தை வழங்கும் வகையில்முட்டுக்காடு மற்றும் முதலியார்குப்பம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகுஇல்லங்களில் பல்வேறு விதமான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் முட்டுக்காடு படகு இல்லத்தில்ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் 200 நபர்கள் அமரும் வகையிலானஇரண்டு அடுக்குகள் கொண்ட மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கிற்காக மும்பை சன்வின்நிறுவனத்தினர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து அரசு, தனியார் பொது பங்களிப்புதிட்டத்தின் கீழ் (PPP) மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டத்தை அமைக்க உள்ளனர். இந்த பூங்கா ஒளிரும் விலங்குகள், வண்ண வண்ண ஒளிரும் பூக்கள், ஒளிரும் மரங்கள், செல்ஃபி புகைப்படம்எடுக்கும் இடங்கள்,  செயற்கை நீரூற்று, மினி 5டி சினிமா, ஒளிரும் நீர் பூங்கா மற்றும் பலதரப்பட்ட உணவுஅரங்குகள் என 2.48 ஏக்கர் (10,038 சதுர மீட்டர்) பரப்பளவில் கலைநயமும் இணைந்து தொழில்நுட்பத்தின்கைவண்ணத்தில் மனதை கொள்ளை கொள்ளும் அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்க உள்ளது

ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளிலும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திதமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார்கள்.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுற்றுலாத் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலாமேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மாமல்லபுரத்திற்கு இந்த ஆண்டு ஜீலை வரை 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். இந்த ஆண்டில் 2 கோடி சுற்றுலா பயணிகள் வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும். வருமானம்கிடைப்பதுடன் பொருளாதார மேம்பாடு அடைவார்கள். மேலும் அரசுக்கு வருவாயும் கிடைக்கும்.

 மாமல்லபுரம் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பொழுது போக்கும் வகையில் மரகதப்பூங்காவில் ஒளிரும் பூங்கா அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி அரசு, தனியார் பொதுபங்களிப்பு திட்டத்தின் கீழ் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தினை தனியார் நிறுவனத்தினர் ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி செலவில் செயல்படுத்த உள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் வருவாய்தனியார் நிறுவனத்தினருக்கும், அரசிற்கும் பகிர்ந்து கொள்ளப்படும். மேலும் மாமல்லபரத்தில் ஒன்றிய அரசின் மூலம் சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி மதிப்பீட்டில்சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் மாமல்லபுரம் அர்ஜூனன் தபசு சிற்பத்தின்மீது 3 டி லேசர் ஒளிக்கற்றை கொண்டு ஒலி, ஒளி காட்சி நடத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொது மேலாளர் திருமதி..கமலா, திருப்போரூர்ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் திரு.இதயவர்மன், இத்திட்டத்தினை செயல்படுத்தும் சன்வின் தனியார்நிறுவனத்தின் திரு.சுபாஷ் பவார், திரு.டி.இளங்கோவன், திரு.டி.அன்புமணி மற்றும் சுற்றுலாத்துறை, தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்