சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் அருவி மதன் இயக்கத்தில் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘நூடுல்ஸ்‘. குறைந்த செலவில். எடுக்கப்பட்ட படமானாலும், மனதிற்கு நிறைவானபடத்தை தந்த இயக்குநர் அருவி மதன் பாராட்டுக்குறியவர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலர் தங்களதுகுடும்பத்துடன் இரவு நேரத்தில் மொட்டை மாடிக்கு சென்று உணவருந்தி பாட்டுபாடி சந்தோஷமாகஆடுகிறார்கள். அந்த சத்தம் பக்கத்து தெரு வரைக்கும் கேட்கிறது. அந்த தெருவாக வந்த போலீஸ்இன்ஸ்பெக்டர் மதன் தட்ஷிணாமூர்த்தி, மொட்டைமாடிக்கு சென்று “நீங்கள் போடும் சத்தம் பக்கத்துதெருவரைக்கும் கேட்கிறது. இரவு நேரத்தில் மற்றவர்கள் தூங்க வேண்டாமா? என்று கண்டிக்கிறார். இதனால்ஹாரிஷ் உத்தமனுக்கும் போலீசுக்கும் வாய்த்தகராறு முற்றுகிறது. இதில் யார் தவறு செய்தார்கள் என்பதுதான்கதை. போலீசுக்கு பயந்து நடுங்குவதில் ஹரிஷ் உத்தமனும் ஷீலா ராஜ்குமாரும் போட்டிபோட்டிக்கொண்டுநடித்திருக்கிறார்கள். வில்லத்தனமான போலிசுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் மதன் தட்சணாமூர்த்தி. போலி வழக்கறிஞராக வருபவர் போலீசைக் கண்டதும் ஜுரம் வந்தவர்கள் போல் நடுங்குவது படத்துக்கு பலம் சேர்க்கிறது