செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஆரம்பக் கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி மற்றும் சோகன்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில்  ஆரம்பக்கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாகஎண்ணும் எழுத்தும்திட்டத்தின் கீழ்கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு...ராகுல் நாத், ..., அவர்கள் நேரில்பார்வையிட்டு, மாணவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசால் உருவாக்கப்பட்டஎண்ணும் எழுத்தும்திட்டமானது ஆரம்பக் கல்விக்கான ஒரு புதுமையானமுன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், குழந்தைகள் தங்களின் கற்றல்செயல்பாட்டுடன் நிறுத்திவிடாமல், நடனம், பேச்சு, பாட்டு ஆகியவற்றில்  ஈடுபாட்டோடு பங்கேற்கும் விதமாகஇக்கல்வி குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் கல்வி பயில ஏதுவாக அமைகிறது. வெறும் கேட்டுக்கொண்டு மட்டும்படிக்கும் படிப்பை விட அனுபவரீதியான கற்றலையும், சுய கண்டறிதல்களையும், சக மாணவர்களுடன்ஒருங்கிணைந்து கற்பதையும் இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.

குழந்தைகள் தங்களின் கற்றல் நிலைக்கு ஏற்றவாறு ஆரம்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குஅரும்பு’, ‘மொட்டு’, ‘மலர்என வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வுமேற்கொண்டு, 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் அரும்பு என்ற பாடத்திட்டத்தின் கீழ் முதல் வரை, முதல் வரை, க் முதல் ன் வரை, ஆங்கில எழுத்துக்கள் சொல்லும்படி கேட்டறிந்தார். இதேபோன்று மொட்டு என்ற பாடத்திட்டத்தின் கீழ் 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் கணிதம்பாடத்தில் கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளை கரும்பலகையில் போட்டு காட்டும் படிகேட்டுவிடையளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், மாணவ, மாணவிகளை கதைகளைசொல்லியும், பாட்டு பாடும் படியும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியரின் கையேடு மற்றும் செயல்முறை புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவியர்கள் கற்றலுடன் கலைநய பொருட்கள்செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். வகுப்பறையில் குழந்தைகள்மகிழ்ச்சியாகவும் மன அழுத்தமின்றியும் இருப்பதற்கு பள்ளி ஆசிரியர்களிடம் மாணவ, மாணவிகளுக்குதகுந்தாற்போல கல்வியை கற்பிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு, முட்டை குறித்து கேட்டறிந்த போது, வீட்டில்சாப்பிடுவதை விட பள்ளியில் தரப்படும் உணவு ருசியாக இருப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். பள்ளிகளில் கழிவறை கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் தொட்டி உடனடியாகஅமைத்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில்மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வண்ணம்பற்றி அறிந்து கொள்வதற்கு காய்கறிகளின் நிறங்களை சொல்லித் தருமாறு அறிவுறுத்தினார். மேலும், மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் அருகில் பயன்பாடின்றி உள்ள பழைய நியாய விலைக்கடை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சோகண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காதவாறு சமன் செய்திடுமாறுஅறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) திரு.அரவிந்தன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.