திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. ர.ராகுல் நாத், இஆப., வழங்கினார்

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் முற்றோதல்  செய்யும் மாணவர்களுக்குப்பரிசுத்தொகை ரூ.10,000/- வழங்கப்பட்டு வந்தது. 2022-2023 ஆம் நிதியாண்டிலிருந்து இப்பரிசுத்தொகை ரூ.15,000/ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில்1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்கு (1.க.ம.திவ்யதர்ஷினி, 2.நா.காவ்யஸ்ரீ,3.செ.கனிஷ்கா, 4.மு.ரெ.ரஃபா, 5.ரா.நீரஜா, 6.உலோ நேத்ரா, 7.மு.பி.இனியன், 8. இரா.தாரனேஷ்வர், 9.ந.நமிபி கோவிந்தன், 10.ந.லேகா தமிழ் தனம், 11.சு.லோகேஷ்,12.சாலை சனாதனன், 13.வி.தருண், 14.கு.சாய்ராம், 15.தி.ஸ்ரீநிவாஸ்) ரூ.15,000/-க்கான காசோலையையும்மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்டசான்றிதழ் மற்றும் அரசாணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆர. ராகுல்நாத், இ.ஆ.ப. அவர்களால் இன்று(07.09.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்(மு.கூ.பொ) திருமதி..பவானி, பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்.