தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்   கே.என். நேரு துவக்கி  வைத்தார்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  (12.09.2023) மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் முடிவுற்ற திட்டப்பணிகளையும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டுவிழாவினை முன்னிட்டு மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவமுகாமினையும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள்முன்னிலையில் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்

அதனைத் தொடர்ந்து பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற 1901 தூய்மை பணியாளர்களுக்கு முழுஉடல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமில் அனைத்து பணியாளருக்கும்45 வகையான பரிசோதனைகளும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி கூடுதலாக 55 பரிசோதனைகளும், மொத்தம் 100 மருத்துவ ஆய்வக பரிசோதனைகள் மற்றும்  தூய்மை பணியாளர்களுக்குயோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இச்சிறப்பு முகாமில் பொது மருத்துவம், பெண்கள் நல மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவ சிகிச்சை, மனநல மருத்துவம், இருதய சிகிச்சை, கல்லீரல் மருத்துவம், சிறுநீரக சிகிச்சை, போதை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை, எலும்பு மூட்டு சிகிச்சை, காது மூக்கு தொண்டை, கண்மருத்துவம், அறுவை சிகிச்சை, ஊட்டச்சத்து சிகிச்சை, காசநோய், தொழுநோய் கண்டறியும் சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, சித்த மருத்துவம் ஆகிய 18 சிறப்பு  மருத்துவ சிகிச்சை கள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இம்முகாமில் தூய்மைப்பணி மேற்கொள்ளும் 12 ஒப்பந்த பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவானமருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டையும்,  10 நபர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாளஅட்டையினையும், மக்களைத் தேடி மருத்துவம் மூலம்  4 நபர்களுக்கு மருத்துவ  பெட்டகத்தையும்,  10 நபர்களுக்கு உடல்பரிசோதனை அட்டையும் வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து பம்மல் மண்டலம் அனகாபுத்தூர் பகுதியில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல்மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.18.88 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர்அபிவிருத்தி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியானது 17 இலட்சம் கொள்ளளவு கொண்டதாகும்.  

 இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் தினசரி 3.40 எம்.எல்.டி குடிநீர் பெறப்பட்டு அனகாபுத்தூர் வார்டு 1, 2, 3 மற்றும் 4 ஆகிய பகுதியில் 7 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் அளவானது தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை என்ற வகையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதன் மூலம் 60697 மக்கள்பயனடைவார்டுகள்.

அதனைத் தொடர்ந்து மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டநிதியின் கீழ் ரூ.161 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கு தாம்பரம்முல்லை நகர் பகுதிகளில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதியில் நாளொன்றுக்குஉற்பத்தியாகும்                               30 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்தகரிக்கப்படுகிறது. மேலும்இத்திட்டத்தின் மூலம் 18876 வீட்டிணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 14 இடங்களில் கழிவுநீரகற்று நிலையங்களும், 10 இடங்களில் சாலையோர கழிவு உந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் வாயிலாக175000 மக்கள் பயனடைவார்கள்.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில்                      தாம்பரம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்துஉள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும்  அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் அமைக்கும்பணிகள், குடிநீர்  பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சிஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்திரு..கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.கோ.காமராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசுமுதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன்,..., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ஆர்.கிர்லோஷ் குமார்,..., தமிழ்நாடு குடிநீர்                 வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.தக்சிணாமூர்த்தி,..., நகராட்சி                       நிர்வாகஇயக்குநர் திரு.சு.சிவராசு,..., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்                                    தலைவர்திரு...ராகுல் நாத், ..., தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர்                                   திருமதிஆர்.அழகுமீனா,..., மண்டலக் குழத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள்  உட்படபலர் கலந்து கொண்டனர்.