மதுராந்தகம் அருகே ‘முதுகரை – கடலூர் கிராமம்‘, ‘மதுராந்தகம் – வெண்ணாங்குப்பட்டு‘, செய்யூர் – படாளம்‘ ஆகிய சாலைகள் விரிவாக்கத்திற்காக 421 மரங்களை வெட்டுவதாகக் கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டமரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,பசுமைத் தாயகம் சார்பில் முதுகரை – கடலூர் கிராம சாலையில் கீரல்வாடி கிராமத்தில் வெட்டப்பட்டமரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வெட்டப்படும் மரங்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டக் கூடாது, மரங்களை வேறு இடத்தில் நடவேண்டும், 4210 மரங்களை புதிதாக நாடுவது குறித்த செயல் திட்டத்தை வெளியிட வேண்டும் என்பதுபசுமைத் தாயகம் கோரிக்கை ஆகும்.
பசுமைத் தாயகம் மாநில செயலாளர் இர. அருள், மாநில துணைச் செயலாளர் நா. கண்ணன், கி. குமரவேல், ஆ.கோ. குணசேகரன், அசோக் மணவாளன், ஓட்டக்கோவில் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.