செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் பெற்றி பெறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ..எஸ். அகாடமிசார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குவாகை சூட வாஎன்ற தலைப்பில் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு...ராகுல் நாத் ..., அவர்கள் இன்று (20.09.2023) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாணவ, மாணவிகளிடையே தெரிவித்ததாவது:

கனவு மெய்ப்பட வேண்டும், இங்கு காணும் எல்லார்க்கும்எனும் வார்த்தைக் கேற்ப  நல் சிந்தனையும், தெளிவாக எதிர்கால தேடலும், ஆர்வமான திட்டமிடலும் ஒருங்கே நாம் கட்டமைத்து கொண்டால் கனவுநனவாகும், நாம்  காண்பதெல்லாம் நிஜமாகும். நீங்கள் தன்னம்பிக்கையோடு  அனைத்தையும் அணுகும்மனதிடத்தை வளர்த்து கொள்ளுங்கள். போட்டி நிறைந்த இந்த காலச் சூழலில் நான் வெற்றி பெறுவேன், வெற்றிபெற்று விட்டேன் என்ற உங்களின் மனப்பான்மையே உங்களை வெகு எளிதாக வெற்றி பெறச் செய்யும்.   வெற்றி பெற அனைத்தையும் படியுங்கள் எதுவும் நமக்கு தொடர்பில்லை என எதையும் ஒதுக்கி விடாதீர்கள்மண் முதல் விண் வரை மகிழ்வுடன் வாசியுங்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாவை உங்களுக்குள்ளேஎழுப்பி விடை காண முயலுங்கள். ஒரு நிகழ்வை உங்கள் பார்வையிலும் எதிர்புற பார்வையிலும் அணுகி  தீர்வைகாணுங்கள்எப்பொழுதும் நேர் கொண்ட பார்வைநேரம் தவறா பணி, எல்லார்க்கும் நாம் பொது, உடனடிதீர்வு, கனிவான அணுகுமுறை, எளியோர்க்கு முந்தி உதவுதல், காலம் தாழ்த்தாமை  என்பதை உங்களின்அடிப்படை பண்புகளாக வகுத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் உங்களின்  ஆளுமை திறன் வளரும். என்னால்முடியாதது எதுவுமில்லை என்ற தன்னம்பிக்கை மிளிரும். நீங்கள் எழுதப்போகும் இந்த தேர்வு உங்களின்எதிர்காலத்தை மட்டுமல்ல. இந்த நாட்டின் எதிர்காலத்தையும் மாற்றக் கூடிய வாய்ப்பாகும்.  இந்த தேர்வில்வெற்றி பெற பொருளாதாரம், நிறம், இனம், கிராமம், நகரம், மொழி என்பதெல்லாம் தடையல்ல. உங்களின்முயலாமை மட்டுமே தடை. தடையை தகர்த்து வெற்றி பெற என் வாழ்த்துக்கள். இந்த நாட்டின் வளர்ச்சிக்குஉங்களின் ஆர்வமான பங்களிப்பு முக்கியம் எதிர்கால இந்தியா சிறந்து விளங்க உங்களின் ஒவ்வொரு அசைவும்முக்கியம். நானே உங்களுக்கு ஓர் உதாரணம். முன்மாதிரி. வழிகாட்டி. நான் வெற்றி பெற்றேன். உங்களாலும்முடியாதா என்ன? முயற்சி செய்யுங்கள். அதுவே பயிற்சியாகும். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் எனமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவ, மாணவிகளுடன் கலைந்துரையாடி, மாணவமாணவியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அனைத்து விதமான சூழ்நிலைகளையும் தடுமாறாமல்தைரியமாக கையாளுமாறு அறிவுறுத்தியதோடு, மக்களுக்கான சிறந்த சேவைகளை புரிந்திட ஏதுவாக சிலஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சாய்ராம் பொறியியல் கல்லூரி தலைவர் டாக்டர்.சாய் பிரகாஷ் லியோ முத்து, தலைமை செய்திஅலுவலர் திரு.நரேஷ் ராஜ், கிங்மேக்கர்ஸ் ..எஸ். அகாடமி இயக்குநர் திரு.பூமிநாதன் மற்றும் சாய்ராம்பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.