செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித் தலைவர் திரு...ராகுல் நாத், ..., அவர்கள் தலைமையில் இன்று (22.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளாவன:

ஆயப்பாக்கம் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும். விவசாயிகள் தங்களிடம்வைத்திருக்கும் பனை விதைகளை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் ஆயப்பாக்கம் ஏரிக்கரைகளில் பனைவிதைகளை நட்டு வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்பூசணி பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்செயல்படுத்த வேண்டும். கொங்கணாஞ்சேரி கிராமத்திற்கு பாலாற்றில் இருந்து குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். நெல் அறுவடை செய்திடும் காலங்களில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் கூடுதலாகஅறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு இருப்பு வைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பா பயிர்கள்பயிரிடுவதற்கு முன்பு வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவில் தளை விதைகளை இருப்பில்வைத்திருக்க ஏற்பாடு செய்திட வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களை கூட்டுறவுத் துறையில்வாயிலாக விற்பனை செய்திட வழிவகை செய்ய வேண்டும். மதுராந்தகம் நெட்ரம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும். கோமாரி நோய்க்கான தடுப்பூசி மருந்துகள் போதிய அளவில் மருத்துவமனையில் இருப்பில்வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். பட்டா மாறுதல் முறைக்கு மாதமொருமுறை சிறப்பு கூட்டம் நடத்திடவழிவகை செய்திட வேண்டும். பருவமழைக்கு முன்பு ஏரிகளை தூர்வாரி, மதகு அமைத்து, விவசாயிகள் சென்றுவர தற்காலிகமாக பாதை அமைத்துத் தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள்முன்வைத்தனர். இக்கோரிக்கைகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்து அவற்றைநிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 இக்கூட்டத்தில், சார் ஆட்சியர் திரு.லட்சுமிபதி, ...,  வேளாண்மை இணை இயக்குநர் திரு.ஆர்.அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) திருமதி. தேன்மொழி, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் திருமதி.ரேணுகாம்பாள், கூட்டுறவு சங்கங்களின்இணைப்பதிவாளர் திருமதி.தமிழ்செல்விமதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர்திரு.ஜவஹர் பிரசாத் ராஜ், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர் திரு.ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் திருமதி.ஜெயந்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்திரு.வேல்முருகன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.சந்திரன், உதவிசெயற்பொறியாளர் திரு.தமிழ்ச்செல்வன் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.