செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (25.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டாமாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 275 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், செங்கல்பட்டு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கட்டுமானப் பணியின்போது பாம்பு கடித்து விபத்து ஏற்பட்டு மரணமடைந்த திரு.பா.ருத்திரகுமார் (லேட்) என்பவரதுகுடும்பத்தினருக்கு விபத்து மரண உதவித்தொகையாக ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.லலிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி.சாகிதா பர்வின், மாவட்ட தொழிலாளர் நலன் உதவி ஆணையர் திரு.செண்பகராமன், மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.