மட்டை பந்தாட்ட வீரர் மலிங்காவாக நடிக்கும் ஆடை வடிவமைப்பாளர் சத்யா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கிவரும் லால் சலாம் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே ரஜினியுடன் ஞாபகார்த்தமாக சத்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை மட்டை பந்தாட்ட வீரர் மலிங்காவாக பலரையும் நினைக்க வைத்துள்ளது.  மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலமாக ஆடை வடிவமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய சத்யா கிட்டத்தட்ட 46 படங்கள் வரை பணியாற்றி உள்ளார்.*******

ராஜா ராணி, இரும்புத்திரை, தெறி, பைரவா, ரஜினி முருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பணியாற்றிஉள்ளதுடன் சமீபத்தில் டைம் டிராவலை மையப்படுத்தி வெளியான மார்க் ஆண்டனி படத்தின் சவாலான ஆடைவடிவமைப்பையும் அசத்தலாக செய்து முடித்தவர் இந்த சத்யா தான் என்பது இன்னொரு ஆச்சரியம்.

தனது புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ள நிலையில், லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டாருடன்பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக திடீரென வைரலானதுகுறித்தும் உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்கிறார் சத்யா.

லால் சலாம் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி மூலமாகத்தான் அந்த படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குகிடைத்தது. ஆடை வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும்நடித்துள்ளேன். கிட்டத்தட்ட 22 நாட்கள் இந்த படத்திற்காக ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றியது என்வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். ஒவ்வொரு நாளும் அவரிடம் இருந்து புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டேன். சிலபேர் வெளியில் ஒரு மாதிரியாகவும் கேரவனுக்குள் ஒரு மாதிரியாகவும் தங்கள்குணாதிசயத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இத்தனை நாள் நான் பார்த்த மனிதர்களில் ரஜினி சார்உள்ளேயும் வெளியேயும் எப்போதுமே ஒரே மாதிரியான மனிதர்தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் எப்படிஒருவர் தன்மையான மனிதனாக இருப்பது என்பதற்கு அவரைவிட வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இந்த படத்தில் அவருக்கான ஆடைகளை வடிவமைக்கும் பொறுப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். அவரைப் பொறுத்தவரை குறை நிறை எதுவாக இருந்தாலும் நம்மிடம் வெளிப்படையாக பேசி விடுவார். ஒருவிஷயத்தை சரியாக செய்து விட்டால் ஒன்றுக்கு மூன்று முறை திரும்பத் திரும்ப  நம்மை பாராட்டுவார். ஒருமுறை சிரமமான விஷயம் ஒன்றை ரொம்பவே எளிதாக செய்து முடித்தேன் அதேசமயம் இன்னொருவிஷயத்தில் இரண்டு முறை முயன்றும் சரிவரவில்லை.. அப்போது என்னிடம் அவர், என்ன சத்யா ரொம்பகஷ்டமான விஷயத்தை எளிதாக செய்து விட்டீர்கள்.. எளிதான ஒரு விஷயத்திற்கு இவ்வளவு சிரமப்படுகிறீர்களே என்று கூறினார்..