தமிழ்நாட்டில் தூய்மை  இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள்

குப்பையில்லா இந்தியாஎன்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட தேசிய  அளவிலான தூய்மை இயக்கம்தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தூய்மை இயக்கங்கள் போன்ற முயற்சிகளுக்கு அப்பால் இந்த இயக்கம் பல்வேறு அம்சங்களை கொண்டதாக இருப்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 மாநிலத்தின் தூய்மைப் பணிகளின் முதுகெலும்பாகத் திகழும்துாய்மைக் காவலர்கள்உட்பட, அடிமட்ட அளவில் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சுகாதாரம் மற்றும் நலவாழ்வுமுகாம்களை நடத்துவது இந்த இயக்கத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடாகும். இதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 25.09.2023 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையுடன்இணைந்து கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல்வேறு துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் மொத்தம் 215 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாமில், மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளைச் சேர்ந்த  2,500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இந்தமருத்துவ முகாம்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தோல் பரிசோதனைகள் மற்றும் நுரையீரல்செயல்பாடு சோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார சேவைகள் இடம்பெற்றன. தூய்மையே சேவை 2023 இயக்கம் சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தூய்மைப்பணியாளர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துகிறது. தூய்மைப் பணியாளர்களின்தேவைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருமுழுமையான அணுகுமுறையுடன், தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் குப்பையில்லா தமிழ்நாடு என்றதொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதை நோக்கி தீர்க்கமாக முன்னேற இந்த இயக்கம் உதவுகிறது.