நெடுஞ்சாலை பணிகளை காணொளி மூலம் கண்காணிக்கும் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (28.9.2023) செங்கல்பட்டுமாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையதின்இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டிய ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப் பணிகளைமாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் () தலைவரும் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் () தலைவரும் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்ததாவது :  

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடிமதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம்கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் கிளாம்பாக்கம் புதிய பேருந்துமுனையத்தையொட்டி, ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் ரூ.17 கோடிமதிப்பீட்டில் வடிகால் அமைகின்ற பணியானது 1.5 கிலோமீட்டர் அளவிற்கு போர்க்கால அடிப்படையில்   மூன்றுபிரிவாக பிரித்து வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வடிகால்   பணியானதுஅக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதே போல, நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.16.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளானஅயனஞ்சேரிமீனாட்சிபுரம் சாலை விரிவாக்கம், போலீஸ் அகாடமி சாலைகூடுவாஞ்சேரிஊனமஞ்சேரிசாலை மற்றும் கூடுவாஞ்சேரிமண்ணிவாக்கம்ஆதனூர் சாலை ஆகிய பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இப்பேருந்து முனையத்தில் முகப்பு வளைவு அமைக்கும் பணி ரூ.4.75 கோடிமதிப்பீட்டில் அமைப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்படும். இப்பேருந்து முனையத்தில் காவல் நிலையம் ரூ.14 .80 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகள்நடைபெறவுள்ளன. முடிச்சூர் சென்னை வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் அமைக்கும் பணிரூ.29 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் () தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.

 இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா..., அவர்கள், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா ..., அவர்கள், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன் அவர்கள், செங்கல்பட்டுமாவட்ட ஆட்சித்தலைவர் திரு...ராகுல்நாத், ..., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆனந்த்குமார் சிங், ..., அவர்கள், தாம்பரம் காவல் ஆணையர் (போக்குவரத்து) திரு.என்.குமார் அவர்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.