சமீபத்தில் லியோ ஆடியோ லாஞ் திட்டமிட்டு கைவிடப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்அடைந்துள்ளனர். இதற்கு மேல் ஆடியோ லாஞ் மட்டுமல்லாமல் படம் சார்பில் எந்த நிகழ்ச்சியும் நடத்த நேரமில்லாத நிலையில்நேரடியாக படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது படக்குழு. இதனைத் தொடர்ந்து திரைப்படத்தை 900 திரைகளில் வெளியிட்டு சாதனை முயற்சியில் ஈடுபட படக்குழுதிட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.*******
லியோ படத்துடன் எந்த படமும் திரைக்கு வராத நிலையில் திரையரங்கு உரிமையாளர்களும் அனைத்துதிரைகளிலும் விஜயின் லியோ படத்தை திரையிட தயாராக உள்ளனர். படத்தின் சிறப்புக் காட்சிக்கோ, படம் தொடர்பான நிகழ்ச்சிகளோ நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லைஎன படக் குழுவில் நெருங்கிய வட்டாரத்தினர் தகவல் தெரிவித்துள்ளது.