சுந்தர் சி. நடிக்கும் புதிய படம் “ஒன் 2 ஒன்”

24 ஹச்.ஆர்.எஸ் . புரொடக்‌ஷன்ஸ்  தயாரிப்பில், கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.சி. நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம்ஒன் 2 ஒன்” . மேலும் இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து  நடிக்கின்றனர். *******

மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.C, அனுராக் காஷ்யப்இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது.  ரசிகர்களுக்கு ஒருவித்தியாசமான கமர்ஷியல் விருந்துள்ளது என்பதை ஃபர்ஸ்ட் லுக்   உறுதிப்படுத்துகிறது.

ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராதவித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமானபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய்வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர்K.திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்இப்படத்திற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் அட்டகாசமான நான்கு பாடல்களைஇசையமைத்துள்ளார். முன்னதாக இவரின் இசையில் பிரமித்து, புத்தம் புதிய ஐஃபோன்  வழங்கி அவரைப்படக்குழு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

தொழில் நுட்பக் குழு விபரம்: தயாரிப்பு – 24 HRS புரொடக்‌ஷன்ஸ் எழுத்து இயக்கம் – K.திருஞானம் இசைசித்தார்த் விபின் ஒளிப்பதிவு – S KA பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் எடிட்டிங் – C S பிரேம் குமார் கலை இயக்கம் – R ஜனார்த்தனன் பாடல்கள்மோகன் ராஜன் சண்டைப்பயிற்சிசிறுத்தை கணேஷ் , ரக்கர் ராம் நடனம்தீனா லைன் புரடியூசர் – K கேசவன் சவுண்ட் & மிக்ஸிங் – T உதயகுமார் ஸ்டில்ஸ் – V பாக்யராஜ் D I – ஶ்ரீ கலாசா ஸ்டூடியோஸ் கலரிஸ்ட்  ரகுராமன் விஷுவல் எஃபெக்ட்ஸ் & சிஜிடி நோட் ஸ்டுடியோ மக்கள் தொடர்புசதீஷ், சிவா (AIM) பப்ளிசிட்டி டிசைன்தினேஷ் அசோக்