‘சாலா‘ ஒரு தனித்துவமான மற்றும் அழுத்தமான கதையைக் கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது. படம் அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைக் காண்பிப்பதன் மூலம் பார்வையாளர்கள் மத்தியிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. ஒரு மதுக் கடையை குத்தகைக்கு எடுக்கும் செயல்பாட்டில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் மற்றும் அதன் பின்னான பகை ஆகியவற்றைச் சுற்றி கதை பரபரப்புடன் நகர்கிறது. இப்படத்தை எஸ்.டி. மணிபால் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக தீரன், நாயகியாக ரேஷ்மா நடித்துள்ளார்கள்******
வில்லனாக சார்லஸ் வினோத் மற்றும் ஸ்ரீநாத், அருள் தாஸ் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் பிற முக்கியகதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவீந்திரநாத் குரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன்படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார், வைர பாலன் கலை இயக்குநராக உள்ளார். படத்தை பீப்பிள் மீடியாஃபேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்க, டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டைக் கைப்பற்றியுள்ளார்.
தொழில்நுட்ப குழு: எழுத்து, இயக்கம்: SD மணிபால், ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு, இசை: தீசன், கலை: வைரபாலன், எடிட்டிங்: புவன், ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ-‘ரக்கர்’ ராம், நடன இயக்குனர்: நோபல் பால், ஆடை: நாகு, ஒலி வடிவமைப்பு: லட்சுமி நாராயண ஏ.எஸ்., விஎஃப்எக்ஸ்: டி நோட் மூர்த்தி, கலரிஸ்ட்: ஆர் நந்தகுமார், தயாரிப்பு நிர்வாகி: வே கி துரைசாமி, இணை இயக்குனர்: எஸ்.ஏ.பொன்மல்லன், ஒப்பனை: ஹரி பிரசாத், ஸ்டில்ஸ்: ரஞ்சித், கண்டெண்ட் ஹெட்: சத்ய பாவனா காதம்பரி, மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா–ரேகா டி‘ஒன், விளம்பர வடிவமைப்பாளர்: ஜோசப் ஜாக்சன், தயாரிப்பு: டிஜி விஸ்வ பிரசாத், பேனர்: மக்கள் மீடியா ஃபேக்டரி, இணை தயாரிப்பு: விவேக் குச்சிபோட்லா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வி ஸ்ரீ நட்ராஜ், தமிழ்நாடு வெளியீடு: டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன்.