காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில்சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க ஒன்றிய– மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் முழுவதும் கையகப்படுத்தப்பட்ட உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 433 நாட்களாக இரவு நேரங்களிலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில் புதிய விமான நிலையத் திட்டத்தில், நீர் நிலைகள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுஇரண்டாவது முறையாக பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் ஆய்வு செய்ய வந்தனர். இவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் விமான நிலைய எதிர்ப்புக்கூட்டமைப்பு குழுவினர், பரந்தூர் – கண்ணந்தங்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.