அந்தரங்க அரசியல்வாதிகளின் செயல்பாட்டை சொல்லும் படம் ‘ரத்தம்’

கமல் போக்ரா, தனஞ்செயன் தயாரிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா சுவேதா, ரம்யா நம்பீசன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படன் ‘ரத்தம்’.  பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்த ஒருவன் ‘என் தலைவனைப் பற்றி தவறாக எழுதுவாயா’ என்று கூறி ஒரு நிருபரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ஓடாமல் அங்கேயே நிற்கிறான். இதேபோல் சில கொலைகளும் நடக்கின்றன. அப்பத்திரிக்கையில் புலனாய்வு நிருபராக இருக்கும் விஜய் ஆண்டனி, கொலை செய்தவனுக்கு மூளை சலவை செய்து யாரோ அவனை தூண்டிவிடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார். அவர்களை கண்டுபிடிப்பதான் கதை. விஜய் ஆண்டனி கதைப்படி பல சோக நிகழ்வுகளை கடந்து வந்திருப்பதால்  எப்போதும் முகத்தை இறுக்கமாகவே வைத்திருக்கிறார். துப்பறிதல் காட்சிகளில் விறுவிறுப்பு இல்லை. மேலோட்டமாக வெள்ளந்தியாகவே இருக்கிறது. ரத்தத்தில் சூடு இல்லை. உறைந்து கிடக்கிறது.