இந்தியா , சீனா ,* இரும்பாம் *ரஷ்யா*
இந்தப் *பெரிய* நாடுகள் இருக்கும்
*ஆசியக் கண்ட* அளவில் நடந்த
ஆசிய விளையாட் டான போட்டியில்
அளவில் சிறியதாய் ஆளு மையிலே
அளவிலாப் பெரிதாய் ஆனநம் *மலேசியா*
இருபத் தேழெனும் இலக்கெனும் *தங்கம்*
அரிதாய்ப் பெற்றே அசத்தி விட்டதே !
போட்டியில் ஒன்றாம் போட்டி *ஸ்குவாஷில்*
ஆட்சியைப் பிடித்ததாய் *ஐந்து தங்கம்*
பெற்ற பெருமையின் உச்ச மாகப்
பெற்றார் *சிவசங் கரி* பொற் பதக்கம் !
அந்த *ஸ்குவாஷ்* போட்டியில் அந்நாள்
முந்தி நின்ற *நிக்கொலஸ் டேவிட்*
முகத்தின் அகமாய் முழுமையாய்த் தெரிகிறார்
பகரும் *சிவசங் கரி* எனும் பாவை !
மலேசிய இலக்கு “வாங்கணும் தங்கம்
இலேசாய் *இருபத் தேழே* என்பதாம் !
அந்த இலக்கை அடையவே *ஸ்குவாஷில்*
வந்த *ஐந்து* தங்கமே காரணம் !
பெரும்பெரும் நாடுகள் பீடுறக் கலந்த
அரும்பெரும் ஆசியப் போட்டியில் மலேசியா
அடைந்ததே *இலக்கை* அந்த மகிழ்ச்சியை
அடைவோம் மலேசியர் அனைவரும் இன்றே !
பதக்கம் பெற்ற பலர்க்கும்
பதநீர் வழங்கிப் பகர்வோம் வாழ்த்தே !
*பாதாசன்*