குடிமை பணி தேர்வுகளில் வெற்றி பெற்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் பணியில் இணைந்துள்ளபயிற்சி அலுவலர்கள் 16 பேர் முழுநேர பணியில் இணைவதற்கு முன்னதாக மேற்கொள்ளும் பாரத் தர்ஷன்பயணத்தில் ஒரு பகுதியாக இன்று சென்னை வந்து பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் பணி முறைகள் பற்றிஅறிந்தனர். இவர்கள் ஜம்மு காஷ்மீரில் சியாச்சின் பகுதிக்கும் பின்னர் வாரணாசிக்கும் அதை தொடர்ந்துபுவனேஸ்வருக்கும் சென்று பல்வேறு தகவல் தொடர்பு நிறுவனங்களின் பணிகளை பற்றி அறிந்துகொண்டுஇன்று சென்னை வந்தடைந்தனர்.
சென்னையில் காஞ்சிபுரம், மஹாபலிபுரம், இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் சென்று அங்குநடைபெறும் பணிகளை பற்றி கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து சென்னை பத்திரிகை தகவல்அலுவலகத்திற்கு வந்து அங்கு தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் பல்வேறுபணிகள் குறித்து தெரிந்து கொண்டனர். அவர்களிடையே உரையாற்றிய கூடுதல் தலைமை இயக்குனர் மா. அண்ணாதுரை, மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் மக்கள் நல திட்டங்கள் பற்றி பொதுமக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நமது பணிகள் அமையவேண்டும் என்று கூறினார். இந்த பயிற்சிஅலுவலர்கள் அடுத்தபடியாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். அங்கு பேரிடர்மேலாண்மை குறித்த தகவல்களை பொதுமக்களிடையே பரப்புவது, தீவு பொருளாதாரத்தை மேம்படுத்துவதுஆகியவை குறித்து பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க உள்ளனர்.
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அடுத்தபடியாக இந்த குழு கொச்சிக்கும் பின்னர் அஹமதாபாத்தில் உள்ளகேவடியாவுக்கும் சென்று இறுதியாக தலைநகர் புது டில்லியை சென்றடைகிறது. தகவல் ஒலிபரப்புஅமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் பல விழிப்புணர்வு பணிகள் குறித்தும்தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய ஊடங்கங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்செய்திகளை முறைப்படுத்தல் தொடர்பாகவும் தகவல் தொடர்பு திட்டங்கள் மற்றும் மேம்பாடு குறித்து நேரடிஅனுபவத்தை பெரும் வகையில் இந்த துறைகளில் பணியாற்ற உள்ள பயிற்சி அலுவலர்களுக்கு இத்தகையபாரத் தர்ஷன் பெருமளவு உதவிகரமாக அமைகிறது.