தீபாவளி வெளியீடு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்இந்தியா படமாக உருவாகும்ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசும்போது கூறியதாவது: ஜிகர்தண்டா 1′ நான் பண்ணவேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள். தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியவில்லை.  நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான்ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘. எனக்கு வாழ்க்கையில யாரெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களை நான்குரு என்று தான் சொல்லுவேன். பாலசந்தர் சார் கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரைநான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான். அவர் என்ன சொன்னாரோஅது தான் இந்தப்படம். கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்புநடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய  காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.*********

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவதுஅனைவருக்கும் வணக்கம், நான் இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ‘பேட்டைபடத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நினைக்கிறேன். ‘பீட்சாஇசைவெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அந்த மாதிரி உணர்வை இப்போது எனக்குஜிகர்தண்டா டபுள்எக்ஸ்  தருகிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தை பற்றி நான்அதிகம் பேசமாட்டேன். இந்த கதையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன். ஸ்டோன் பெஞ்ச்பிலிம்ஸ் மற்றும் கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. சந்தோஷ் நாராயணன் சொன்ன மாதிரி இந்தப்படம்  ரொம்ப நன்றாக வந்துள்ளது. பத்திரிகையாளர் நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு கட்டாயம் வேண்டும். அனைவருக்கும் நன்றி.

இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்  தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன் அசோசியேட் தயாரிப்பாளர்: அலங்கார் பாண்டியன் இசை: சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி. சந்தானம் சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன் கலை இயக்கம்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன் நடன அமைப்பு: ஷெரிப் எம், பாபா பாஸ்கர் ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன் ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா ஒப்பனை: வினோத். எஸ் ஆடைகள்: சுபேர் பாடல்கள்: விவேக், முத்தமிழ் ஆர்.எம்.எஸ் ஸ்டில்ஸ்: எம். தினேஷ் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர்: எச். மோனேஷ் கலரிஸ்ட்: ரங்கா பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ட்யூனி ஜான் டீசர் கட்: ஆஷிஷ் சவுண்ட் மிக்ஸ்: சுரேன். ஜி ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: கணேஷ் பி.எஸ் தயாரிப்பு நிர்வாகி: ஜி. துரைமுருகன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: ராஜ்குமார் தயாரிப்பு மேலாளர்கள்: என். சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள் நிர்வாகத் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன். எம் மக்கள் தொடர்பு: நிகில் முருகன்