சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து 24 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டகாவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மூத்த குடிமக்கள் புகார் மனுக்கள் மீது, அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கசம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காவல் ஆணையாளர் குறை தீர் முகாமில் 1. P.சின்னையா பிள்ளை, வ/75, த/பெ.பாண்டுரங்க பிள்ளை, இந்திரா நகர், அடையாறு, என்பவர் தனது வீட்டுமனை கட்ட பணம் கொடுத்த நிலையில் முழுமையாகமுடிக்காமல் பணமும் தராமல் ஏமாற்றியது தொடர்பாகவும், 2.திருமதி.மீராபாய் சந்திரன், பெ/வ.70, நேருஅவென்யூ, பாரதிதாசன் காலனி, கே.கே.நகர் என்பவர் தனது வீட்டின் பின்புறம் வசிப்பவர் தனதுவீட்டிற்குள் அவரது கட்டிடத்தை எழுப்பி, தனது வீட்டின் பக்கம் கழிவு நீர் தொட்டியை அமைத்துதொந்தரவு கொடுப்பது தொடர்பாகவும், 3.திருமதி.அழகம்மை, பெ/வ.68, க/பெ.குட்டையன், ராமகிருஷ்ணா நகர், ஆழ்வார் திருநகர் என்பவர் தனது வீட்டில் வாடகைக்கு இருந்த நபர்கள் தர வேண்டிய2.5 லட்சம் வாடகை பாக்கியை பெற்று தரவும், 4.மோகன் சர்மா, வ/76, 10வது அவென்யூ, ஹாரிங்டன்ரோடு, சென்னை என்பவர் தன்னை தாக்கிய நபர்கள் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் காவல்ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
இந்நிகழ்வின் போது துணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.V.R.சீனிவாசன் மற்றும் காவல்அதிகாரிகள் உடனிருந்தனர்.