ஹாய் நான்னா‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நானி அடுத்ததாக இயக்குநர் விவேக் ஆத்திரியாவுடன் இணைகிறார். ‘ஆர் ஆர் ஆர்‘ எனும் திரைப்படத்திற்கு பிறகு, ”சூர்யாவின் சனிக்கிழமை” படத்தை டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு நாளில் கட்டுப்படுத்த முடியாத கதாநாயகனின் அரிய மற்றும் தனித்துவமான தரத்தை விவரிக்கும் சாய் குமாரின் பின்னணி குரலில் அதிரடி நிரம்பிய அன்செயின்ட்– தொடங்குகிறது. சனிக்கிழமை அந்த விசேட நாள். இறுதியாக ‘சூர்யாவின் சனிக்கிழமை‘ என தலைப்பு வெளியிடப்படுகிறது. ******
முற்றிலும் தனித்துவமான கருத்துக்களை முயற்சிக்கும் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவிடமிருந்து இது நிச்சயமாக எதிர்பார்க்கப்படுவதில்லை. மேலும் இந்த திரைப்படம் நானி முன் எப்போதும் இல்லாத ஒரு புதிய அவதாரத்தில் காண்பிக்கும் என்று இந்த அன்செயின்ட் – Unchained வீடியோ உறுதியளிக்கிறது. உண்மையில்நானிக்கு இங்கு ஒரு வீரம் மிகுந்த அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெற்றி பெற்று வெளியேவரும்போது மக்களின் முகத்தில் புன்னகை இருக்கும். இறுதி அத்தியாயம் கதாபாத்திரத்திற்கு போதுமானஉயர்வை கொண்டு வருகிறது.
வித்தியாசமான சப்ஜெக்டுகளில் முயற்சி செய்து கதாபாத்திரங்களின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நடிகர் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் ஆச்சரியப்படுத்துகிறார். இவை அனைத்தும்நம்பிக்கைக்குரியதாக தெரிகிறது. டைட்டிலுக்கான பிரத்யேக வீடியோவில் நானியின் தோற்றம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, தயாரிப்பு தரம் …என அனைத்தும் அசாதாரணமானதாக இருக்கிறது.