சென்னை, அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சஞ்சனா, பெ/வ.28, த/பெ.ஜெயகுமார் என்பவர் நேற்று (19.11.2023) காலை, சுபநிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவரதுதந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று, வீட்டினருகே அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சத்யாஷோரூம் அருகில் இறங்கி அங்கிருந்த ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, சஞ்சனா தனது கையில்அணிந்திருந்த 20 கிராம் எடை கொண்ட தங்க வளையல் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்துசஞ்சனா, K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணைமேற்கொள்ளப்பட்டது.
K-8 அரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவஇடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அரும்பாக்கம், சத்யாஷோரூம் அருகே ஒரு நபர் சாலையில் குனிந்து, தங்க வளையலை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இந்நிலையில், அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்துவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வபிரதீப், வ/30, த/பெ.ஞானசேகர் என்பவர் K-8 அரும்பாக்கம் காவல்நிலையம் வந்து, நேற்று (19.11.2023) காலை வேலைக்கு செல்லும்போது, அரும்பாக்கம், சத்யா ஷோரூம்அருகே சாலையில் தங்க வளையலை கண்டதாகவும், அதை எடுத்து வைத்திருந்த நிலையில், யாரும் உரிமைகோராததால், காவல் நிலையத்தில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்து, தங்க வளையலை ஒப்படைத்தார்.
அதன்பேரில் புகார்தாரர் சஞ்சனாவை அழைத்து, செல்வபிரதீப் ஒப்படைத்த தங்க வளையலை காண்பித்தபோது, அது சஞ்சனாவின் தங்க வளையல் என உறுதி செய்யப்பட்டது.
ஆகவே, உரிய முறையில் சாலையில் தவறவிட்டு பின்னர் கண்டெடுத்த 20 கிராம் எடை கொண்ட தங்கவளையல் அரும்பாக்கம் உதவி ஆணையாளர் முன்னிலையில், புகார்தாரர் சஞ்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.