இராமநாதபுரம் மாவட்டத்தில் (02.12.2023) சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனாபட்நாயக்,இஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனா பட்நாயக்,இஆ.ப., அவர்கள், உச்சிபுளி, அரியனேந்தல் மற்றும் தெளிச்சாத்தநல்லூர்; ஆகிய இடங்களில் உள்ள சிட்கோ தொழில் பேட்டைமையங்களில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களை பார்வையிட்டு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் தக்க வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டுமெனதெரிவித்ததுடன், தொழில் முனைவோர் மேலும் ஆர்வமுடன் செயல்பட்டு அதிகளவில் தொழில் மையங்களைஉருவாக்கிட வேண்டுமென தெரிவித்தார்.
பின்னர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், தெற்கூர் கிராமத்திலிருந்து சாத்தான்குளம் வரை முதல்வரின்கிராமச்சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.93.332 இலட்சம் மதிப்பீட்டில் 1.98 கிலோமீட்டர் தூரம்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்திடஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்,
தொடர்ந்து களிமண்குண்டு ஊராட்சி, சண்முகவேல் பட்டினம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராமம்ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை சீர்படுத்தி திறந்தவெளிகிணறு அமைத்து சோலார் மின்இணைப்பு வழங்கி சொட்டு நீர் உபகரணங்கள் பயன்படுத்தி பலவகைமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் நடுவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். இதைபோல் மற்ற இடங்களிலும் பயன்பாடற்ற தரிசு நிலங்களை சீரமைத்து விவசாயிகள் வேளாண் பணிகளைமேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் கடலோரப் பகுதியில் அதிக அளவு உப்பு தண்ணீராக விலை நிலங்கள்பகுதியில் இருப்பதால் சொட்டுநீர் பாசன திட்டத்தில் விவசாய பணிகளை மேற்கோள்ள சிரமமாக உள்ளது. அதனால் எங்கள் பகுதிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்திலிருந்து பண்ணை குட்டை அமைத்து அதன் மூலம் தண்ணீர் பாசனம் முறையை கையாளும் வகையில்
திட்டங்களை மாற்றித்தர உதவிட வேண்டுமென தெரிவித்தார்கள். இது குறித்து வேளாண்மைத்துறைசெயலாளரிடம் கருத்துக்களை தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர்கள் மற்றும்விவசாயிகளிடம் தெரிவித்தார்
பின்னர் அரியனேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை மேற்பார்வையிட்டு விவசாயிகளுக்கு அரசுவழங்கும் திட்டங்களில் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் விவசாயிகளுக்கு தேவையானஉரம் மற்றும் விதைகளை போதிய அளவு இருப்பில் வைத்துக்கொள்ள அலுவலர்களுக்கு தெரிவித்ததுடன் அருகாமையிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று பொதுமக்களுக்கு வழங்கி வரும் உணவுப்பொருட்களின்இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பொ.ரத்தினசாமி,இ.ஆ.ப., பரமக்குடி சார்ஆட்சியர் அப்தாப் ரசூல்,இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம்,இ.ஆ.ப. வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் முத்துக்குமார் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.தனுஷ்கோடி , மாவட்ட தொழில்மைய பொறியாளர் பிரதீப் குமார் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.சந்தோஷம் அவர்கள், உதவி செயற்பொறியாளர்கள் பாபு கல்யாணசுந்தரம் அவர்கள், அர்ஜ{னன் அவர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.