*தேவஸ்தானக் கோவில்களில்* *தேன்தமிழில் இனி வழிபாடு !*

பல்லாண்டு பல்லாண்டு *வடமொழியில் பூசை*

     பக்தர்களும் புரோகிதரும், *தமிழர்களே செய்த*

*எல்லாக்கோ வில்களிலும்* நடத்திவரக் கண்டோம் !

       இவ்வுலகில் முதன்முதலில் பிறந்தவனே *தமிழன் !*

சொல்லாக, எழுத்தாக , மொழியாக முதலில்

    *தோன்றியதும் தமிழ்* என்றே அறிஞர்களும் சொல்வார் !

கல்வெட்டாய்த், தொல்பொருளாய், இலக்கியமாய் இதற்குக்

      காட்டிவைத்தார் ; எழுதிவைத்தார் ஏராளம் சான்று !

முதல்மனிதன்  முதன்மொழியாம் தமிழினையே பேசி,

      முதல் *நாக ரிக* மனித னாய்த் *தமிழன்* வாழ்ந்தான் !

கதையல்ல ; வரலாறு காட்டுகின்ற உண்மை !

      கண்டுமிதைக், கேட்டுமிதைக் கடவுளையே வணங்க

எதுமொழியாய் முதலிருக்கும் ? *தமிழ்தானே* ; இதையும்

       ஏற்காமல் பிறருள்ளார் என்பதல்ல *கவலை*

இதைநம்ப மாட்டாமல் *எந்தமிழர்* பலராய்ஜூ

       இருக்கின்றார் எனக்கேட்டே *கண்களில்நீர்த் திவலை !*

வடமொழியில் மந்திரத்தைச் சொன்னால்தான் கடவுள்

அஞ்சி    வருவாராம் ; அவர்காதில் விழுந்திடுமாம் என்று

மடத்தனமாய்ச் சிலர்சொல்வார் ; அதுநன்றே என்ன

      வலியுறுத்திச் சொல்வதுவோ நம்வேலை அல்ல !

நடைமுறையில் கோவில்களில் தமிழ்வேண்டும் ; இதையே

       நாடறிய,உலகறியச் சொல்கின்றோம் ; இதனை

*அட , போடா ,* பொய்யென்றால்  *வடமொழியே இறைவன்*

        *அறிந்தமொழி* என்பதுதான் மடமையிலும் மடமை !

*அப்பர்* தமிழ்ப் பாடலினைக் கேட்டபினர்க் கோவில்

     அதன்கதவு திறந்ததெனும் வரலாறும் பொய்யோ ?

ஒப்பரிய *அபிராமிப் பட்டர் ;* அவர் பாட்டால்

     உளம்நெகிழ்ந்தே அமாவாசை அன்று *முழு நிலவும்*

அப்பொழுதே தோன்றியதும் அள்ளிவிட்ட கதையா ?

      *அர்த்தநா ரீசுவரா*  நீயே ,முன் தோன்றி

எப்பொழுதும் எம்மொழியும் எம்மவர்க்குப் பிடிக்கும் ;

       எனில்,*தமிழைக்* கேட்பதிலோ தனிமகிழ்ச்சி என்க !

இதைஉணர்ந்தே *கோலலம்பூர் மாரியம்மன் தேவஸ்*

     தானத்தின் *தலைவரவர் நடராஜா* இன்று

கதையல்ல இஃதுண்மை தேவஸ்தா னத்தின்

      கட்டுப்பாட் டிலிலுள்ள திருக்கோவில் களிலே

*அதிகாரப் பூசைமொழி தமிழே* தான்  என்றே

        *அறிவித்த தைக்* கேட்டுக்  *கடவுளர்க ளுடனே*

அதிபக்தித் *தமிழர்களும்* ஆனந்த மாகி

        *அன்பர்திரு நடராஜா* வாழ்கவெனச் சொன்னார் !

*நாம்தமிழர் ; நமதுமொழி தமிழ்* என்று நாளும்

       நம்கடவுள் வழிபாட்டை நற்றமிழில்.நடத்தி

*ஓம்* என்னும் வட எழுத்து மந்திரத்தை நீக்கி

         உயிர்மொழியாம் தமிழினிலே *ஓம்* என்றே எழுதி

*ஓம்மகா கணபதியே ; ஓம்நமசி வாயநம* என்றும்

       *ஓம்நமோ நாராயண, ஓம்சரவ ணபவ*

*ஓம்,ஒம்* என் றேதமிழில்  உச்சரித்தே வணங்கில்

       உயர்வுநமக் கென்பதுவே *அம்பாள்வாக் கென்க !*

         

                                                                              *பாதாசன்*

*அரும்பொருள் விளக்கம் :-*

நீர்த் திவலை : நீர்த் துளி