தமிழ்ப்பள்ளிப் பதாகையிலே தமிழைக் காணோம் !
தமிழறியாப் பேதைகளா ஆங்(கு) ஆ சான்கள் ?
தமிழ்வகுப்பே நடத்தலையா அவர்கள்… சீச்சீ ?!
*தமிழ்ப்பள்ளி புக்கிட்மெட் ராஜம்* தன்னில்
தமிழ்க்குழந்தைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி அஃதில்
*தமிழினையே த்மிழர்களே அவம தித்தே*
தமிழ்ப்பள்ளிப் பதாகையிலே நீக்கி விட்டே
தமிழ்நிகழ்ச்சி நடத்தியதும் *தப்போ, தப்பு !*
*தமிழ்ப்பள்ளி வேண்டாமே* என்று சில்லோர்
*சட்டத்தின்* துணைகொண்டே தமிழைக் கொல்ல
இமியளவும் சிந்திக்க மறந்து விட்டார் ;
இங்குள்ள நீதிமன்றம் ஏறி விட்டார் !
தமிழ்மொழியும் சட்டத்திற் குட்பட் டேதான்
தமிழ்ப்பள்ளி வழியாக வாழு தென்றே
*தமிழ்ப்பற்றோர்* போராடும் வேளை இங்கே
தமிழர்சிலர் தமிழினையே அழிக்கின் றாரே !
தமிழ்விந்தில் பிறந்தவர்கள் அவர்கள் தாமா ?
தமிழ்க்குருதி ஓடலையா அவரு டம்பில் ?
தமிழ்ப்பள்ளிக்(கு) அனுப்பாத தமிழப் பெற்றோர் ;
தமிழ்ப்பள்ளிப் பதாகையிலே தமிழை விட்டோர்
தமிழர்களாய் இனிக்கருதப் படவே கூடா ;
தவறிந்தக் கருத்தென்போர்க்(கு) ஓர்கோ ரிக்கை !
தமிழ்ப்பள்ளி , தமிழையுமே அழிக்கப் பார்க்கும்
*டமிலர்கள்* யார் ? அவருக்(கு) *ஓர்பேர் சொல்க !*
*தன்மானம்* தனைக்காக்கும் *ஆடை* போன்ற
*தமிழ்மொழியை அணியாத* தமிழ னுக்கே
என்மானம் உண்டாம் ? ஓ ! *தமிழ்ப டித்தே*
இந்நாட்டில் மட்டுமல்ல எந்நா டெங்கும்
தன்மாடம் தன்னாடை அணிந்தி ருக்கும்
தமிழர்களே நீங்கள்தாம் சொல்ல வேண்டும் !
என் ஈனப் பிறவிகளோ ? தமிழைக் கொல்லும்
எந்தமிழர் எவரெனினும் திருந்தப் பாரீர் !
தமிழ்நிகழ்ச்சி நடத்திடுவோர் அனைவ ருக்கும்
தணியாத கோபமுடன் கடிந்தே சொல்வோம் !
தமிழ்ச்சொல்லே இல்லாத பதாகை ஏதும்
தவறியுந்தான் இனிமேலும் தொங்க விட்டால்
இமைநொடிக்கும் முனர்,அவர்கள் நிகழ்ச்சி யைத்தான்
இதயமிலா அரக்கரைப்போல் *ஒதுக்கி வை ! வை !*
*சுமை,தமிழே* எனில்அந்தச் சுமையைத் தாங்கத்
துப்பில்லாத் தமிழர்களைக் *காறித் துப்பு !*
*பாதாசன்*