திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்.ஐ.சி. என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும்மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் எல்.ஐ.சி.என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்புநிறுவனமான சுமா பிக்சர்சின் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்த பெயரை தரக்கோரி தனது மேலாளர்திரு மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் எல்.ஐ.சி. என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்குமிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்து விட்டேன். எல்.ஐ.சி. என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை திரு விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்தவிதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை திரு விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன்என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்