இந்தியா முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சலார்‘- படத்தின் சமீபத்திய முன்னோட்டத்தில் கான்சார் எனப்படும் உலகத்தையும், பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் என்ற இரு நண்பர்களின் புதிரான கதையையும், கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வழங்குகிறது. முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை சித்தரிக்கும் பிரபாஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். முன்னோட்டம் ஒரு அழுத்தமான விவரிப்புடன் தொடங்குகிறது. கான்சார் நகரை சுற்றியுள்ள கதை மற்றும்பிருத்விராஜ்– பிரபாஸ் இடையேயான நட்புடன் பார்வையாளர்களை மூழ்கடிக்கிறது.*****
காட்சிகள் தொடர்ந்துவிரிவடையும்போது, பிரபாஸ் இதுவரை கண்டிராத அவதாரத்தில் தோன்றுகிறார். அவரது தீவிரமான மற்றும்கட்டளை தொனியுடன் கூடிய தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் அழியாத அடையாளத்தைஏற்படுத்துகிறார். ட்ரெய்லரின் கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் வரவழைத்து, பலஅதிர்ச்சிகரமான கேள்விகளை முன் வைக்கிறது. பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் இடையே இருந்த பிரிக்கமுடியாத நட்பு… எப்படி கசப்பான பகையாக மாறியது? இந்த முத்தாய்ப்பான காட்சி.. ‘சலார்‘ நகரம் முழுவதும்தொடர்ந்து பேசப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் அப்படத்தின் உடனடி வெளியீட்டிற்கானஎதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
சலாரில் உள்ள கதாபாத்திரங்கள் வசீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தேசம் முழுவதிலும்உள்ள ரசிகர்களிடம் நிச்சயம் எதிரொலிக்கும் வகையிலான பெரியதொரு தோற்றத்தை கொண்டுள்ளது. கதையுடன் திறமையாக பின்னி பிணைந்திருக்கும் இசை… ஒட்டுமொத்த சினிமா அனுபவத்தையும் உயர்த்தி, ‘சலார்‘ என்ற பிரம்மாண்டத்திற்கு சுவை கூட்டுகிறது.