ராமலிங்கம் தயாரிப்பில் ரவிமுருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர், ஜார்ஜ் மரியன. ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஆயிரம் பொற்காசுகள். சரவணனும் விதார்த்தும் வேலையில்லாமல் அரசு சலுகைகளை வாங்கி பிழைப்பு நடத்துகிறார்கள். கழிப்பறை கட்ட அர்சு கொடுக்கும்ரூ.12 ஆயிரத்துக்காக சுடுகாட்டில் வெட்டியானாக இருக்கும் ஜார்ஜ் மரியானை தனது வீட்டு கொள்ளைபுரத்தில்குழி தோண்ட சொல்கிறார் சரவணன். குழி தோண்டும்போது ஆயிரம் பொற்காசுகள் கொண்ட ஒரு செம்புபுதையல் கிடைக்கிறது. அதை வெட்டியானும் சரவணன் விதார்த் ஆகிய மூவருக்கும் பங்கு என்று ஒப்பந்தம்செய்து கொள்கிறார்கள். ஆனால் புதையல் கிடைத்திருக்கும் செய்தி போலீஸ் உள்பட ஊர்மக்கள்அனைவருக்கும் தெரிந்து அனைவரும் பங்கு கேட்கிறார்கள். இறுதியில் புதையல் யாருக்கு கிடைக்கிறதுஎன்பதுதான் கதை. ஆரம்ப காட்சியிலிருந்து உச்சக்கட்ட காட்சிவரை நகைச்சுவையுடன் விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். ஏமாற்றி பிழைக்கும் கதாபாத்திரத்திற்கு சரவணனும், விதார்த்தும்அருமையாக பொறிந்திருக்கிறார்கள். வெட்டியான் வேடத்திற்கு ஜார்ஜ் மரியான் கனகச்சிதமாகநடித்திருக்கிறார். அருந்ததி நாயர் தமிழ்த்திரையுலகில் வலம் வருவார். கிராமத்தின் அழகை கண்முன்காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பானு முருகன். கொடுத்த காசுக்கு திருப்தியுடன். வெளிவருவார்கள்ரசிகர்கள்.