செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 193பயனாளிகளுக்கு ரூ.97,07,354 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (27.12.2023) வழங்கினார். இந்த மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது,
இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 193பயனாளிகளுக்கு ரூ.97,07,354 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது போன்ற மனுநீதி நாள் முகாம்கள் ஊராட்சிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது. மனுநீதி நாள் முகாம்களில் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்பதால் கிராம மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதுடன், ஒவ்வொரு துறையின் மூலம் அரசு மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடம் அரசின் திட்டங்களை எளிதாக கொண்டு சேர்க்க முடியும்.
மேலும் இந்த முகாம்களில் துறை சார்ந்த விளக்க கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் விளக்க கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது இந்த வாய்ப்பை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இன்றைய மனுநீதி நாள் முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த 10 நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை, இலவச வீட்டுமனைபட்டா 114 பயனாளிகளுக்கும், தொடக்க வேளாண்மைத் துறையின் சார்பாக 6 பயனாளிகளுக்கு கறவை மாட்டுக்கடன் , 4 பயனாளிகளுக்கு பயிர்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்1, ஒருவருக்கு சிறுவணிக்கடன், வேளாண் உழவர்நலத்துறையின் விவசாய இடுபொருட்கள், தோட்டக்கலைத் துறையின் சார்பாக தல 1 பயனாளிகளுக்கு வெண்டை விதைமற்றும் மிளகாய் விதை , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக 25 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நல வாரிய அட்டைகள் , பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாகஊட்டசத்து பெட்டகம் 10 பயனாளிகளுக்கு, மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக காதுக்கு பின்அணியும் கருவி 4 நபர்களுக்கும், வேளாண்மை உழவர்நலத்துறை சார்பாக திரவ உயிர் உரங்கள்,பேட்டரி தெளிபான், விசை தெளிப்பான், நுண்ணுட்ட உரங்கள் 5 நபர்களுக்கும் என மொத்தம் 193 பயனாளிகளுக்கு ரூ.97,07,354 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் மனு நீதி நாள் முகாமில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சுபா நந்தினி, சார் ஆட்சியர் (செங்கல்பட்டு) திரு.வெ.ச.நாராயணசாமி இ.ஆ.ப. அவர்கள் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., திருக்கழுக்குன்றம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.டி. அரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.டி. தமிழ்மணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி.சாகிதா பர்வின், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதிபேபி இந்திரா , ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கனகம்பாள் , ஊராட்சி மன்ற துணைதலைவர் திரு.குமார் திருக்கழுக்குன்றம்வட்டாட்சியர் ராஜேஸ்வரி மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.