*’முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கொரோனா 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவரான  வீரபாபு சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில்  எழுதி இயக்கி தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள். படம் தான்முடக்கறுத்தான்‘. இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் மருத்துவர் கே.வீரபாபு, மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.********

இத்திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) வெளியீட்டு விழா  சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்Dr.K.வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குனர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிமற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் முதலாவதாகபேசிய வீரபாபு, தனது படத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துகளையும்கோரிக்கைகளையும் அரசாங்கத்திற்கும் வைத்துள்ளதாக கூறினார். அவையனைத்தும் குழந்தைகள் சார்ந்த வேண்டுகோளாகவே இருக்கும் என்றும் படத்தின் கருவாக குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்துசாலைகளில் பிச்சை எடுக்கும் கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து படத்தைதயாரித்துள்ளதாகவும் கூறினார். அடுத்த கோவிட்-19(COVID19) பெருந்தொற்று ஏற்படுவதற்குள் அதைசந்திப்பதற்கு சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளுக்கான வசதிகள் அடிப்படையிலும் தயாராக இருக்கவேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.