வாய்புளித்த தோ,மாங்காய் புளித்த தோவாய்
வாயாலே *பகாசா,கி லிங்* என் றேயார்
காய்ப்பேச்சைப் பேசிடினும் தப்பே ! தப்பே !
காசினியில் நேற்றுமட்டும் பெய்தே தீர்த்த
பேய்மழையில் இன்றுமுளைத் திட்ட காளான்
பீடுதமிழ் என்றெவரும் எண்ண வேண்டாம் !
*தாய்மொழியாய்* உலகளவில் *பலமொ ழிக்கே*
தன்சொற்கள் தந்து,தமிழ் பெருமை கொள்ளும் !
*ஆய்வுகளும்* ஐ.நா.வின் *யூனெஸ் கோ* வும்
அகிலத்தின் *முதன்மொழியும் தமிழே* என்று
வாய்நிறைய மகிழ்வுடனே கூறி யுள்ளார் !
வரலாற்றில் *செம்மொழிக ளாக* உள்ள
தாய்மொழிகள் ஆறனுள்ளும் மொழியாய் வாளர்
*தனிச்சிறப்பைக் கொண்டமொழி *தமிழே* என்று
வாயுரையாய் மட்டுமன்றி எழுதி யுள்ள
வரலாற்றைப் பொய்யென்றே யாரும் சொல்லார் !
அதுபோன்று *சீனமொழி* அதையும் தானே
அகிலத்தார் *செம்மொழியாய்* அறிவித் துள்ளார் !
இதிலிருந்தே *மலேசியர்கள்* நன்கு ணர்ந்தே
இனியேனும் *தமிழ்,சீனம்* இரண்டுக் குந்தான்
மதிப்பளித்தால் நாடுநலம் வளமும் காணும் !
வையத்துச் செம்மொழிகள் *தமிழ்,சீ னத்தை*
துதிக்காத போதினிலும் தாழ்வே இல்லை ;
மதித்திடவும் வேண்டாமோ ? இதுதான் கேள்வி !
செம்மொழிகள் தமிழ்,சீன உரிமை யாளர்
சீனர்களும் தமிழர்களும் வாழும் நாடாய்
இம்மலைநா டென்றுவர லாறு சொல்லும்
என்றென்றும் என்கையிலே *மலேசி யத்தார்*
சும்மா,ஏன் *வந்தேறி அவர்கள்* என்று
துப்புக்கெட் டேதப்பாய்ச் சொல்ல லாமோ ?
*சிம்மாச னம்,* அவர்க்குத் தேவை இல்லை ;
தினம்,அவர்க ளைத்தாழ்த்தல் வேண்டாம் ; வேண்டாம் !
மலையகத்தின் *வீரமகன் ஹங்து வா* வின்
மலாய்நூலில் தமிழ் *பகசா கிலிங்* கென் றேதான்
தலையிலொன்றும் இல்லாதார் தவறாய்ச் சொல்லித்
தலைசிறந்த தமிழ்மொழியைத் தாழ்த்தி உள்ளார் .
மலைமொழியில் தமிழ்குறித்த அனைத்தும் முற்றாய்
மாபெரிய வரலாற்றுப்.பிழையே என்று
மலைசியத்தார் இனியேனும் உணர்ந்தே நாளும்
மனமார *ஒற்றுமையாய்* வாழ்வோம் வாரீர் !
*பாதாசன்*