செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டநிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கைபுத்தக திருவிழா-2023, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் (28.12.2023) துவக்கிவைத்தார். அமைச்சர் ஒவ்வொரு புத்தகஅரங்குகளாக சுற்றி பார்த்து புத்தகங்களை வாங்கினார். மேலும் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளகண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு பள்ளி மாணவ மாணவிகளிடம் குறித்து கேட்டறிந்தார், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பார்வையிட்டார் மேலும் தோட்டக்கலைதுறையின் சார்பாக பயனாளிக்கு தென்னங்கன்று வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்துநடத்தும் செங்கை புத்தக திருவிழாவானது 28.12.2023 முதல் 04.01.2023 வரை நடைபெற உள்ளது. இதில்நாள் தோறும் சிந்தனையை தூண்டும் பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், திருப்புர் கிருஷ்ணன், பர்வீன் சுல்தானா, பாரதி கிருஷ்ணகுமார், பாலபாரதி, சுகி சிவம், ராமகிருஷ்ணன், திரைபட நடிகர்மகேஷ் ,சுகிர்தராணி,மோகனசுந்தரம் மற்றும் நிறைவு நாளில் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புறையாற்ற உள்ளனர். 80 க்கு மேற்பட்ட அரங்குகளில் 1000 த்திற்க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. இதில்அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ100 கூப்பன் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயணசர்மா இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ் இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாகிதா பர்வீன், செங்கல்பட்டுநகராட்சி நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் செம்பருத்தி துர்கேஷ் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.