சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னண கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் அறிமுக நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்புவிருந்தினர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.******
நடிகர் தனுஷ் பேசியதாவது .. சிறு துளி பெரு வெள்ளம், 2002 லிருந்து சேர்த்த துளிகள், ரசிக பெருவெள்ளமாக வந்துள்ளது. உங்களால்தான் நான். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இந்தப்படம் பற்றி யோசித்தால் மனதில் வருவது உழைப்பு. அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம். வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உருவாக்கியபடம். உண்மையில் அருண் மாதேஸ்வரன் தான் இந்தப்படத்தின் டெவில். அவரும் அவர் டீமும் கொடுத்தஉழைப்பைப் பார்த்த பிறகு, நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை. நான் நிறைய புது இயக்குநரோடுவேலை பார்த்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனை பார்க்கும் போது, எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் தான்வருகிறது. அருண் முதன் முதலில் பார்க்கும் போது, காதில் கம்மல் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடிடியூட்டோடுஇருந்தார். என்ன இவர் இப்படி இருக்கிறார்? என்று தோன்றியது. கதை சொன்னார், இது எல்லாம் பண்ணமுடியுமா ? என சந்தேகம் வந்தது. அவரிடமே பண்ண முடியுமா எனக்கேட்டேன், ம்ம்… பண்ணலாம் சார்என்றார். இப்போது படம் பார்க்கும் போது தான் அதன் அர்த்தம் புரிகிறது. படத்தில் மிரட்டியிருக்கிறார். பொல்லாதவன் படத்தில் தான் எனக்கு ஜீவி அறிமுகம், அங்கு ஆரம்பித்த பயணம். எனக்காக சூப்பர் ஹிட்சாங்ஸ் நிறைய பண்ணிவிட்டார். எப்போது போன் செய்தாலும், சொல்லு மச்சான் என ஓடி வருவார், ஜீவி ஐ லவ்யூ. சிவராஜ்குமார் சார் என்னோட ஃபேன் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார், அவரது பண்புக்கு, பணிவுக்கு நான் அடி பணிகிறேன். அப்பா பெயரைக் காப்பாற்றுவது எப்படி என்று, உங்களைப் பார்த்துத் தான்கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, மிகப்பெரிய ஆதரவு தந்த, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. ஆர்ட் டைரக்டர்ராமலிங்கம் சார், திலீப் சார் இருவரின் உழைப்பும் மிகப்பெரிது. கேப்டன் மில்லர் என்பதன் டேக் லைன், மரியாதைதான் சுதந்திரம் என்பதாகும். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது?, எதற்குச் சுதந்திரம்இருக்கிறது?. எது சொன்னாலும், எது செய்தாலும், இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டேஇருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை. ஒரு சின்ன கூட்டம், இதை செய்துகொண்டே இருக்கிறது. அதைப்பற்றிகவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம். கேப்டன் மில்லர் ஒரு உலகப்படமாக இருக்கும். ரொம்பபுதிதான படமாக, உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்காக இங்கு வந்த மாரி செல்வராஜ் சாருக்குநன்றி. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் பேசியதாவது..,
கேப்டன் மில்லர் படத்தைப் பற்றி எல்லோரும் நிறையச் சொல்லி விட்டார்கள். என்னுடைய சினிமா ஜர்னியில்நான் அட்மையர் பண்ணியது என்றால் ரஜினி சார் தான். அவருடன் 5 படங்கள் செய்தோம். அதற்குப் பிறகு, நான் அதிகம் ரசிக்கும் நடிகர் தனுஷ். அவருடன் 3 படங்கள் செய்துவிட்டோம், இன்னும் பயணம் தொடர்கிறது. அருண் பற்றி முதலில் என் மகன் தான் சொன்னார். அவர் படம் ராக்கி பார்த்தேன், என்னைப் பிரமிக்க வைத்தது. பாரதிராஜா சாரை சந்தித்தபோது, அருண் மிகப்பெரிய திறமைசாலி என்றார். அந்த நம்பிக்கையில் தான் தனுஷ்சாரை அணுகினோம். அருண் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தைத் தந்துள்ளார். எங்கள் நிறுவனத்திலிருந்து பொங்கலுக்கு வந்த, விஸ்வாசம் படம் போல, இப்படமும் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். தனுஷ் சார் மிகக்கடின உழைப்பைத் தந்துள்ளார். சிவராஜ்குமார், சந்தீப், பிரியா, ஜீவி பிரகாஷ் அனைவருக்கும்நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியதாவது…T.G.தியாகராஜன் சாருக்கு என் முதல் நன்றி. என்னை நம்பி கேப்டன் மில்லர் போன்ற பெரிய படம் செய்ததற்குநன்றி. முதலில் நான் தேவதாஸ் என்ற கதை எழுதினேன், ஜீவிக்கு தெரியும். அந்தக்கதைக்கே தனுஷ்சாரைத்தான் அணுக முயற்சித்தேன் முடியவில்லை. ராக்கிக்கும் அவர் தான் மனதிலிருந்தார், ஆனால்நடக்கவில்லை. இந்த வாய்ப்பு வந்த போது, உடனே இந்தக்கதையை அனுப்பி விட்டேன். என்னை நம்பிவந்துவிட்டார். ராக்கி வரும் முன்னரே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அடுத்து இன்னும் ஒரு பெரிய படம்செய்யப்போகிறோம். நான் எந்தக்கதை எழுதினாலும், அவர் தான் முதன் முதலில் மனதில் வருகிறார். என்னைநம்பிய தனுஷ் சாருக்கு நன்றி. ஜீவி எனக்கு மிகவும் நெருக்கம், அவரோடு படம் செய்தது மகிழ்ச்சி. சிவராஜ்குமார் சாரைச் சந்திக்கப் பெங்களூர் போனேன், அவரைப் பார்த்தது காட்ஃபாதர் பட அனுபவம் போலஇருந்தது. அங்கு அவர் அப்படிதான் இருந்தார். தனுஷ் எனக்குப் பிடிக்கும், அவருக்காக நடிக்கிறேன் என்றுநடிக்க வந்தார். அவர் ஒரு ஸ்டார், ஆனால் எங்களை எல்லாம் ஈஸியாக வைத்துக் கொண்டார். பிரியங்காவிற்கு முதல் நாள் ஷீட்டிங்கிலேயே, துப்பாக்கி தந்துவிட்டோம், பயந்து விட்டார். கொஞ்ச நாளில்பழகிவிட்டார், அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள்எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும், நன்றி.