வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் போது அரசின் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விரிவாகவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காட்பாடியை அடுத்த கரிகரி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்தியஅரசின் பல்வேறு துறைகளின் சார்பாக முகாம் நடைபெற்றது.
முகாமில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அவற்றின் பயங்களைப் பெறுவது தொடர்பாகவும் மக்களுக்குவிளக்கமளிக்கப்பட்டது. கரிகரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டமான உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு இணைப்புவழங்கப்பட்டது.
இதில் பயன் பெற்ற ரஞ்சனி என்ற பெண் கூறுகையில், இதுவரை விறகு அடுப்பின் மூலமாகவே தாங்கள்சமையல் செய்து வந்ததாகத் தெரிவித்தார். தற்போது அரசுத் திட்டங்களின் பயன்களை விளக்கி தங்களதுபகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புவழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மத்திய அரசு செயல்படுத்தும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களும் தங்களுக்குப்பெரிதும் பயனளிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற திட்டங்களைசெயல்படுத்துவதற்காக மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் எனும் உறுதிமொழிக்கு ஏற்ப மத்திய அரசின் திட்டங்களின்பயன்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் நோக்கமாகும்.