சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியின் தொடக்க விழா, தீவுத்திடல் அறிஞர் அண்ணா கலையரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியை தொடங்கிவைத்தார். மேலும் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களை பார்வையிட்டார். 48 வதுஇந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியினை தொடங்கி வைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர்
பேசுகையில் தெரிவித்த்தாவது, 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்கட்சியை தொடங்கி வைப்பதில் மிகுந்தமகிழ்ச்சியடைகின்றேன். இங்கு வந்ததில் எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன. நான் பள்ளியில்படிக்கும்போது, 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு எப்போதெல்லாம் சுற்றுலா பொருட்காட்சி நடைபெறுமோஅப்போதெல்லாம், என்னுடைய சகோதரிகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த குடும்பத்தாருடன் பலமுறை வந்துஇந்த பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இப்போது அதே பொருட்காட்சியைதிறந்து வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது. நான் பொறுப்பு வகிக்கக்கூடிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அரங்கமும் இந்த பொருட்காட்சியில்அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சியாகும். என்னுடைய துறையின் சார்பில் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய பல்வேறு பணிகள், நிகழ்ச்சிகள், பல்வேறு முன்னெடுப்புகள் குறித்த விளக்கங்கள் அந்தஅரங்கத்திலே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து துறைகளின் சார்பில் இந்த இரண்டறை ஆண்டு காலத்தில் என்னென்ன முயற்சிகள்எடுக்கப்பட்டுள்ளன, என்னென்ன திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று ஒவ்வொரு அரங்கத்திலேயும்சிறப்பாக விளக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பத்திரிக்கை நண்பர்களெல்லாம், கண்காட்சி அரங்கங்களை பார்வையிட்டு அனைத்து பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமாய்கேட்டுக் கொள்கிறேன். சென்ற ஆண்டு பொருட்காட்சியை திறக்கின்ற வாய்ப்பு கிடைத்தும் என்னால்வரமுடிய வில்லை. அடுத்த 70 நாட்கள் இந்த பொருட்காட்சி நடைபெற இருக்கின்றது. எனவேபொதுமக்கள் அனைவரும் இந்த பொருட்காட்சியை பார்வையிட்டு, அரசு திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு, பொருட்காட்சியின் நோக்கத்தை வெற்றியாக்கி காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சிமேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன், துணை மேயர் மு. மகேஷ்குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல்தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/சுற்றுலா ஆணையர்மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர்/ மேலாண்மை இயக்குநர், காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.