*தமிழ்ப்பள்ளிகள் அனைத்திற்கும்* *தைப்பொங்கல் விடுப்பு வேண்டும் !*

தமிழரெல்லாம் தைப்பொங்கல் கொண்டாடும் போது

    *தமிழ்ப்பள்ளி* அனைத்திலுமே *தைப்பொங்கல்* நாளை

அமைவாகக் கொண்டாட வேண்டுமையா யாண்டும் !

        அதில்தானே மாணவர்க்கே  வரலாறு தெரியும் !

தமிழ்ப்பள்ளி *தலைமையா சிரியர்மன் றத்தார்*

      தானரசுக் கே,இந்தக் கோரிக்கை விடுத்துத்

தமிழ்ப்பள்ளி களில் *பொங்கல் திருநாளை* மகிழ்வாய்த்

       தவறாமல் மறவாமல் கொண்டாடச் செய்வீர் !

பொங்கலெனில் வெறும்அரிசிப் பொங்கலென யாரும்

    பொருள்கொள்ள வேண்டாமே ; பொங்கலது தமிழர்

தங்களுக்கு மட்டுமன்றி உலகத்தார் யார்க்கும்

     தரமிக்க உணவான அரிசிதனை அளிக்கும்

தங்கநிகர்  மதிப்புமிகு உழவர்க்கு நன்றி

       சாலவுரைப் பதனோடு  புவனமெலாம் வாழத்

தங்கஒளி தரும்சூரி யனுக்கும்நம் நன்றி

      சாற்றுவதை உணர்த்துவதே *தைப்பொங்கல் நோக்கம் !*

மிகப்பெரிய உலகத்தின் மிகப்பெரிய *கண்டம்*

    மேலான *ஆசியாக் கண்டம்* எனச் சொல்வார் !

மிகப்பெரிய மக்கள்தொகை  கொண்டகண்டம் அதற்கே

       *வேளாண்மை* ஒன்றேதான் முதல்தொழிலாம் அதனால்

மிகமேலாய் மக்களின்றும் அரிசியையே உணவாய்

     விரும்பிடுவார் ; அதனால்ந்ம்*உழவர்க்குப் பெருமை !*

உழவர்களின் பெருமைதனை ; அருமைதனை இந்த

       உலகத்தார் அறிவதற்காய்த் தொல்தமிழர் நாளும்

உழவுக்கும் உழவர்க்கும் நன்றிதனைக் கூறும்

      உயர்பண்பைக் கொண்டிருக்கும் தைப்பொங்கல் நாளைக்

கிழவர்முதல் சிறுவரெலாம் கொண்டாட வேண்டிக்

       கிளைகொளையாய்ப் படர்ந்துவரும் தமிழர்சந் ததியர்

விழுமியமாய்ப் பொங்கலினை என்றென்றும் எண்ணி

      வீரியமாய்க் கொண்டாட வழிசெய்க மன்றீர் !

மாணவர்க்கும் மாணவியர் அனைவருக்கும்   *பொங்கல்*

       *வரலாறு* தெரியாமல் இருந்திடக்கூ டாதே !

மாணமிகு தைமுதல்நாள் பொங்கலென அறிந்தால்

     வருங்காலப் பெரியவராய் பின்னாளில் அவர்கள்

காணுகையில் கட்டாயம் பொங்கலினைத் தொடர்வர் !

       காலமெலாம் இதுதொடரத் தமிழ்ப்பள்ளி பொங்கல்

பேணுதற்கே அவற்றுக்குப் பொங்கல்விடு முறையைப்

     பீடுபெறு *மன்றத்தார்* பெற்றளிக்க வேண்டும் !

                                                                      *பாதாசன்*

*அரும்பொருள் விளக்கம் :-*

    மன்றீர் : தமிழாசிரியர் மன்றத்தார்