தமிழ்ப்பள்ளி யில்படிக்கத்
தங்களுடை பிள்ளைகளைத்
தமிழ்ப்பெற்றோர் அனுப்பாத
தற்குரிய காரணங்கள்
தமிழ்ப்பெற்றோ ருக்கின்றும்
சரியாகத் தெரியவில்லை !
தமிழ்ப்பெற்றோர்க்(கு) அதுதெரிந்தால்
தங்கள் *பிழை* தனையுணர்வார் !
அவர்கள்செய் *பிழையென்ன ?*
ஆராய வேண்டுமையா !
*எவருடைய பிள்ளைகளும்*
*இன்றுதமிழ்ப் பள்ளிகளின்*
*சுவர்களுக்குள் தமிழ்படித்தால்*
*சுகப்படவே மாட்டார்கள் ;*
*அவர்களுடை எதிர்காலம்*
*அடியோடு பாழ்படுமே !*
இப்படியோர் *பொய்க்கருத்தை*
எப்படியோ தமிழ்ப்பெற்றோர்
தப்பிதமாய்ப் பெற்றதுதான் ,
தங்களுடை பிள்ளைகளைத்
தப்பாமல் தமிழ்ப்பள்ளி
தனில்சேர்க்க வேண்டுமெனும்
ஒப்பரிய எண்ணத்தை
*ஒழித்துவிடக் காரணமே !*
இந்த்வொரு காரணத்தின்
*இடுப்பெலும்பை முறித்துவிட்டால்*
எந்தவொரு தமிழ்ப்பெற்றோர்
இனிமேலும் தங்களுடை
சந்ததியை *ஏழ்வயதில்*
சத்தியமாய்த் தமிழ்ப்பள்ளி
முந்திடுவார் சேர்ப்பதற்கே
முக்காலும் இஃதுண்மை !
*பிறமொழிசார்* பள்ளிகளில்
பிள்ளைகளை வயதேழில்
முறையாகச் சேர்த்தால்தான்
முன்னேற முடியுமெனும்
*கறைமிகுந்த* சிந்தனையைக்
*கல்மனத்தில்* பொறித்துவைத்துக்
குறைபிள்ளைக் கேசெய்தார்
*கூர்மதி,இல் பெற்றோர்கள் !*….
*பாதாசன்*