இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) தனது கல்வித் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிலமாதங்களுக்கு முன், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (ஐஐடி சென்னை) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்தியத்தர நிர்ணய அமைவனம், சென்னை ஐஐடியில் இன்று (ஜனவரி 16 2024), ஐஐடி ஆசிரியர்களுக்கானவிழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்வின் மூலம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளான, தரநிலைகளைமேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை ஒருங்கிணைத்தல், தற்போதுள்ள ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டுத் திட்ட வெளியீடுகளைத் தரநிலைகளுடன் ஒருங்கிணைத்தல், பாடத்திட்டங்களில் தரநிலைகளை ஒருங்கிணைப்பதை ஊக்குவித்தல், அறிவுப் பரிமாற்றம், தரநிலைகள் மூலம் எவ்வாறுபுதுமைகளை ஊக்குவிக்கலாம் மற்றும் எளிதாக்கலாம் என்பதை செயல்படுத்துவதற்கான மையங்கள்அமைத்தல் போன்றவை செயல்படுத்தப்படும்..
புதுதில்லி பிஐஎஸ் துணைத் தலைமை இயக்குநர் விஞ்ஞானி திரு சஞ்சய் பந்த், புதுதில்லி பிஐஎஸ் இயக்குநர்& தலைவர் (சிவில் என்ஜினியரிங் துறை) விஞ்ஞானி திரு அருண்குமார் ஆகியோர் மேற்கண்ட நிகழ்ச்சியைநடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடியின், பிஐஎஸ்– தரநிலை பேராசிரியர் ரூபன் கோஸ்வாமியும் கலந்து கொண்டுவாழ்த்துரை வழங்கினார்.
சென்னை ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர்கள் / துறைத் தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்திய தேசியத் தர நிர்ணய அமைப்பான இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), மத்திய அரசின்நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வஅமைப்பாகும். இது தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும்தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ குறியீடு), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளிநகைகள்/கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் முத்திரை மற்றும் ஆய்வக சேவைகள் போன்ற பல்வேறுதிட்டங்களை செயல்படுத்துகிறது.