வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை இன்று நிறைவடைந்தது 

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நமது லட்சியம் வளர்ச்சியடை ந்த பாரதம்விழிப்புணர்வு யாத்திரை மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்ற விழிப்புணர்வு யாத்திரை நிகழ்ச்சி, இன்றுமாலை நிறைவு பெற்றது. இதில்,247 கிராம ஊராட்சிகள் மற்றும் நகரங்களில் 30க்கும் மேற்பட்டஇடங்களில் முகாம் நடத்தப்பட்டது.

இதில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு இணைப்பு, சாலையோர வியாபாரிகளுக்குநிதியுதவி, முத்ரா திட்டத்தின் மூலம் கடன், ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம், விபத்து காப்பீடு திட்டம். செல்வமகள் சேமிப்பு  திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான தகுதியான  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த 45 நாட்களில் 10 கோடிக்கு மேல் வங்கி மூலம்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர வியாபாரிகள் சுமார் 10,000 பேருக்கு கடனுதவிவழங்கப்பட்டுள்ளது . மேலும் சுமார் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகளும், 500க்கும் மேற்பட்டபயனாளிகளுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. அப்துல்லாபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு யாத்திரை நிகழ்ச்சியில் ஏராளமானபொதுமக்கள் பங்கேற்றனர்.