செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (22.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 256 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, செங்கல்பட்டு, சார் ஆட்சியர்நாராயண சர்மா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்)லலிதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., சார் ஆட்சியர் (பயிற்சி) பிரியா, இ.ஆ.ப.,, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாகிதா பர்வின், மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.