நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடுசெய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் மத்திய ஜல் சக்தித் துறைஅமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் , தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர்பங்கேற்று துவங்கி வைத்தார்.ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நீர் இயக்கம் “நீர்தொலைநோக்குப் பார்வை @ 2047 – முன்னோக்கிய பயணம்” என்ற தலைப்பில் அகில இந்தியசெயலாளர்கள் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்படும் எனஅறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில்அகில இந்திய செயலாளர்கள் மாநாடு தொடங்கியது. நீர் மேலாண்மை மற்றும் நீரின் தரம், பருவநிலைபின்னடைவுகள் மற்றும் நதிகளின் தூய்மை நிலை, நீர் பயன்பாட்டு திறன், நீர் சேமிப்பு, மக்கள் பங்கேற்புஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது. மத்தியஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர்துரை முருகன் ஆகியோர் முதல் நாள் விவாதங்களில் பங்கேற்றனர். ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்பாதுகாப்பு தொடர்பாக தயாரிக்கப்பட்ட படம் இங்கு வெளியிடப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் மழை நீர்சேகரிப்புத் தொடர்பான நூல் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் அமைச்சகங்களின் மத்திய செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள், நீர்வளத் துறை செயலாளர்கள், மாநிலங்களின் செயலாளர்கள் பங்கேற்கின்றனர். நீர் வளத்துறைதொடர்பான பணிகளில் உள்ளவர்களிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான முக்கிய தளமாக இந்தமாநாடு அமைகிறது. அரசு சாரா அமைப்புகள், மற்றும் தொடர்புடைய பிற பிரதிநிதிகளும் இந்தமாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், மாநிலங்களில் பாயும் நதிகளில் உள்ள மாசுக்களை அகற்றிசுத்தப்படுத்துவதற்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு ”நமாமி கங்கா” திட்டத்தைமுன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இதனை செயல்படுத்த வேண்டும் என்றார். மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு மூலம் தண்ணீரை மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் எனகேட்டுக்கொண்ட அமைச்சர், அடுத்த 25 ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை மிகப் பெரிய சவாலாகஇருக்கும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு தொலைநோக்கு திட்டங்களை வகுக்க வேண்டும்என்றார். இந்தியா முழுவதும் உள்ள நிலத்தடி நீர் பரப்பளவு 25 லட்சம் சதுர கிலோமீட்டர் என மதிப்பீடுசெய்யப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள், கிராம பஞ்சாயத்து மாநகராட்சி அகையவை இணைந்துதிட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரை உயர்த்த பயன்படுத்துவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வேண்டும். விவசாயத்திற்கு தண்ணீரை குறைவாக பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்து பற்றாக்குறை போக்கதண்ணீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் பேசியதாவது.. நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் மாசுபாடு தண்ணீரை மறுசுழற்சி செய்வது பல்வேறுநடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில்கடந்த ஆண்டு நடைபெற்ற நீர்வளத்துறை மாநாட்டில் 16 மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் நீர்வளத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 22 தீர்மானங்கள்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் 22 தீர்மானங்கள்குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன. 25 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும்வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்தும் ஆய்வு செய்கையில் 14% நீர்மாசுபாடு இருப்பதும் இதை 10% ஆக குறைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு நீர்வளத்துறையின்கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இ.ஆ.ப, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத் இ.ஆ.ப. மற்றும் மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாநிலங்களின் கூடுதல் தலைமைச்செயலாளர்கள், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர்கள், பல்வேறு மாநிலங்களின் நீர்வளத்துறைச்செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.