ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், புல்லமடை ஊராட்சி, செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த முருகன் சாலை விபத்தில் காயமடைந்து மரணமடைந்தார். அன்னாரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப.,
தமிழ்நாடுஅரசின் சார்பில் (27.01.2024) செங்கமடையில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்ற. மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, செங்கமடை மயானத்தில், காவல் துறையின் சார்பாக 21 குண்டுகள் முழங்க முழு அரசுமரியாதையுடன் அன்னாரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வின்போது ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சுவாமிநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மருத்துவக்குழுவினர் உடனிருந்தார்.